Top posting users this month
No user |
Similar topics
கமெரா மீதான பிரதமர் மோடியின் தீராக் காதல்
Page 1 of 1

பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சந்திப்பிலும் தீவிரமான கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கும் போதும் கமெரா மீதும் ஒரு ஞாபகம் கொண்டிருக்கிறார் என்ற கருத்து, வைரலாக ஊடகங்களில் தற்சமயம் பரவி வருகிறது.
தான் தெளிவாக ஊடகங்களில் பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதில் மோடி கவனமாக இருப்பது ஊடகங்களால் இப்போது கவனிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் மோடி அமெரிக்கா சென்றபோது, அங்குள்ள முகநூல் தலைமையகத்துக்கு சென்றிருந்தார்.
அப்போது, பிரதமர் மோடியை வரவேற்றார் முகநூல் நிறுவனர் மார்க் ஷூக்கர்பெர்க்.
அந்த சந்திப்பின் காட்சிகளை, ஊடகங்கள் கமெராவிலும் வீடியோவிலும் வலது பக்கத்திலிருந்து விழுங்கிக் கொண்டிருந்தன.
கமெராவை பற்றிய கவனம் இல்லாமல் மோடியோடு பேசுவதில் ஆழ்ந்திருந்த மார்க், கமெராவை மோடிக்கு மறைத்தபடி வலது பக்கம் நின்றிருந்தார்.
இடது பக்கம் ஒரு பெண்ணும் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, கமெரா தன்மீது விழவேண்டும் என்ற ஆர்வத்தில் மார்க் உடையை முதுகுப்பக்கம் பிடித்து லேசாக இழுத்து ஒதுக்கினார் மோடி.
இந்த சம்பவத்திலிருந்து, மோடியின் கமெரா ஆர்வம் ஒரு வி.ஐ.பி.யை இழுத்துவிடும் அளவில் வெளிப்பட்டதால், அவருடைய கடந்தகால நிகழ்ச்சிகள் அதில் பதிவுசெய்யப்பட்ட வீடியோ மற்றும் போட்டோக்கள் எல்லாம் இந்த கண்ணோட்டத்தோடு எல்லோராலும் பார்க்கப்படுகிறது.
அதை வைத்து அவருடைய மனநிலையும் எண்ணங்களும் கணிக்கப்படுகிறது.
அவர் பிரதமர் பதவி ஏற்கும்போதே அவருடைய உடைகள் வெளிநாட்டினரால் கவரப்பட்டு பாராட்டப்பட்டது. இது ஊடகங்களின் வாயிலாகவே ஏற்பட்டது.
சுதந்திர தின விழாவிலும் விலை உயர்ந்த பிரத்தியேக உடை அவருக்காக தயாரிக்கப்பட்டது. எதிர்கட்சிகளாலும் அது விமர்சிக்கப்பட்டது. அந்த ஆடை பிறகு ஏலம் விடப்பட்டு, நிதி உதவியாக்கப்பட்டது.
திட்டமிட்ட செயல்பாடுகள் மோடியிடம் இருந்தாலும் தனது தோற்றம், தீர்க்கமான பேச்சு, மீடியாக்களை குறிப்பாக வலைதளங்களை பயன்படுத்தும் திறமை இவைகளை பெரிதாக நம்புகிறார்.
தடைகளையும் எதிர்ப்புகளையும் கடந்து, பிரதமர் வேட்பாளராக கட்சிக்குள்ளும், பிரதமராக தேர்தலிலும் வெற்றிபெற தனக்கு உதவி இருப்பதாக கருதுகிறார். அதன் விளைவுதான் அவருக்கு கமெராவை கவனிக்கும் மனநிலை.
ஒரு பொறுப்புள்ள பிரதமராக போட்டோவை ஒரு பொருட்டாக நினைக்க முடியாத சூழலிலும் அவர் அருகில் இருப்பவர்கள் அந்த நிகழ்வு மனநிலையில் ஒன்றியிருக்கும் வேளையிலும் மோடியின் கண்கள் மட்டும் கமெராவை கவனிக்கும் 11 புகைப்படங்களை வெளியிட்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
தான் அழகா இருக்க வேண்டும் என்பதும் தன்னுடைய அழகு போட்டோவில் நல்லா விழ வேண்டும் என்பதும் எல்லோருக்குமே உள்ள விருப்பம்தான்.
அந்த விருப்பத்தை ஒரு குறையாக கருத முடியாது. கமெராவை பார்க்காததால் மட்டும் அந்த ஆர்வம் இல்லை என்றும் சொல்லமுடியாது.
பிரபலமான பல மனிதர்களுக்கு ஆச்சரியப்படும் அளவிலான சிறிய பலவீனம் இருப்பது பற்றி நாம் நிறையவே அறிந்திருப்போம். அந்த வகைதான் இதுவும்.
இந்த சுபாவம் அவருக்கு அரம்ப காலத்திலிருந்தே இருந்திருக்கலாம். இது ஒரு பெரிய தவறில்லை என்பதாலும் இதை கவனித்து ஒரு குறையாக யாரும் விமர்சிக்காததாலும் அந்த மனோபாவத்தை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்திருக்கலாம்.
இந்த மனநிலையை குறையாக சொல்லவும் காரணம் உள்ளது. பல நாட்டு முக்கிய பிரதிநிதிகளோடு இந்தியா சார்பான கொள்கைகளை ஒரு பிரதமராக முன்வைக்கும்போது இருக்கும் ஈடுபாட்டை, இந்த கமெரா ஆர்வம் குறைக்கலாம் மோடி சாதாரண மனிதரல்ல, ஒரு நாட்டின் பிரதமர், அவரை தெளிவாக படமெடுத்து வெளியிடும் பொறுப்பு ஊடகங்களுக்கு நிச்சயமாக இருக்கும்.
அதனால், கமெராவில் பதிவாவது பற்றிய கவலை மோடிக்கு தேவையில்லாதது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, நிச்சயமாக அவரிடம் மாற்றம் இருக்கலாம். இருக்க வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 30 நாட்களில் 60 ஆயிரம் கிலோமீற்றர் பயணம்: பிரதமர் மோடியின் அதிரடி திட்டம்
» பிரதமர் மோடியுடன் பிரேக் - அப்! மோடியின் தீவிர ஆதரவாளர் அதிரடி அறிவிப்பு
» பிரதமர் மோடியின் ஆன்மிக குரு மறைந்தார்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum