Top posting users this month
No user |
Similar topics
மதுவிலக்கு கோரிய காந்தியவாதி சசிபெருமாள் மனைவி, மகன்கள், மகள் அதிரடி கைது!
Page 1 of 1

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சசிபெருமாளின் மனைவி, மகன்கள் மற்றும் மகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு:
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே, இன்று காலை சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் மற்றும் மகள் கவியரசி ஆகியோர் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
அவர்களுடன், ம.தி.மு.க., தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினரும் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
ஆனால், இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இருப்பினும், காவல்துறையின் உத்தரவையும் மீறி அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து, சசிபெருமாள் மகன் விவேக் மற்றும் மகள் கவியரசி உள்பட உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சசிபெருமாளின் மனைவி மகிழம் மற்றும் இளைய மகன் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், சசிபெருமாளின் உடலை இடமாற்றம் செய்யாமல் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
முதல் இணைப்பு:
பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்தினால் மட்டுமே சசிபெருமாள் உடலை வாங்குவோம், என்று அவரது இரண்டாவது மகன் நவநவீதன் மற்றும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வந்த காந்திய வாதி சசிபெருமாள், கன்னியாகுமரியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்.
செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டம் நடத்திய அவர் கோபுரத்தின் உச்சியில் மயங்கிய நிலையில் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார்.
அவரது உடலில் ரத்தம் கசிந்திருந்தது. பின்னர் அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சசிபெருமாளின் உடல், ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடுவதாக அறிவித்தால் தான் உடலை வாங்கிச் செல்வோம் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து அவரது மகன் நவநீதன் கூறுகையில், என் தந்தை எந்த கொள்கைக்காக உயிரை நீத்தாரோ அந்த கொள்கை நிறைவேறும் வரை நானும், எங்கள் குடும்பமும் ஓயப் போவதில்லை.
தமிழக அரசு பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி இன்று (2-ம் திகதி) சேலம், பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்திசிலை முன்பு நானும், எனது சிற்றன்னை மகிளம் ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காந்தியவாதி சசிபெருமாள் உடலுடன் ஊர்வலம்: தடையை மீறிய வைகோ
» மதுவிலக்கு கொண்டுவர முடியாதவர்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம்? விஜயகாந்த் அதிரடி கேள்வி
» நடிகை ஆஷா சரத் தொடர்பான ஆபாச வீடியோ: 2 சிறுவர்கள் அதிரடி கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum