Top posting users this month
No user |
செம்மரக் கடத்தல் விவகாரம்: தலைமறைவான தெலுங்கு நடிகை அதிரடி கைது
Page 1 of 1

செம்மரக் கடத்தலில் தொடர்புடையதாக கூறப்பட்ட தெலுங்கு நடிகை நீத்து அகர்வாலை ஆந்திர பொலிசார் கைது செய்துள்ளனர்.
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் 20 தமிழர்களைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக தெலுங்குப் படத் தயாரிப்பாளர் மஸ்தான் வாலி என்பவர் கைதாகினார்.
அவர் பொலிசில் கொடுத்த வாக்குமூலத்தில், தனக்கு செம்மரக் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து நடிகை நீத்துவுக்கு நகைகளையும், ஹைதராபாத்தில் ஒரு வீடும் வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மஸ்தான் வாலி தனது காதலியும் நடிகையுமான நீத்து அகர்வால் வங்கி கணக்கு மூலம் வட மாநில செம்மரக் கடத்தல்காரர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது.
பின்னர் மஸ்தான் வாலி தன்னைக் குறித்து பொலிசில் கூறிவிட்ட தகவல் அறிந்த நீத்து அகர்வால் தலைமறைவாகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நீத்து மீதும் வழக்குப் பதிவு செய்த பொலிசார், அவரது வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர்.
நீத்துவின் வங்கி கணக்கில் இருந்து யார் யாருக்கு பணம் அனுப்பப்பட்டு உள்ளது என பொலிசார் ஆய்வு செய்த போது குறுகிய காலத்தில் பாலுநாயக் என்பவருக்கு பெரிய அளவிலான தொகை அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்தது.
அதே போல் பாலுநாயக்கும் பெரிய தொகையை நீத்து அகர்வால் வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த நீத்துவை ஆந்திரப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும், அவரிடம் நடத்தப்படும் விசாரணையில், செம்மரக்கடத்தல் தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum