Top posting users this month
No user |
Similar topics
மதுவிலக்கு கொண்டுவர முடியாதவர்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம்? விஜயகாந்த் அதிரடி கேள்வி
Page 1 of 1

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர முடியாதவர்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மதுவிலக்கு குறித்து பேசினால் மதுகுடிப்பவர்களை நீங்கள் திருத்துங்கள், உங்கள் கட்சி திருத்தட்டும், மதுக்குடிப்பவர்களை உங்கள் கட்சியிலிருந்து நீக்குங்கள் என்று ஆணவத்துடன் கேலியும், கிண்டலும் செய்து கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் மதுக்குடிப்பதை தடுத்திட பிரச்சாரம் செய்யலாம் வாருங்கள் என்றும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தரம்தாழ்ந்து பேசுகிறார்.
மக்கள் நலனுக்காக பல பிரச்சனைகளில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டச்சொல்லி தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும், “செவிடன் காதில் ஊதிய சங்காக”, இருந்துகொண்டு செவி சாய்க்காத இந்த அதிமுக அரசு, மதுப்பிரச்சனையில் மட்டும் அனைவரும் ஒன்று சேரலாம் என்றுகூறுவது நகைப்புக்குரியதாகும்.
இதைச் சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? எதற்காக நீங்கள் அமைச்சராக இருக்கிறீர்கள்? மதுகுடிப்பவர்களை தடுக்க முடியவில்லை, திருத்த முடியவில்லை என்றால், உங்களுக்கு ஆட்சியும், அதிகாரமும் எதற்காக? ஆட்சியை விட்டு விட்டு போய்விடுங்கள்.
மதுவில் இருந்து மக்களை மீட்டெடுக்க எங்களுக்குத் தெரியும். மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று அறிவித்தபிறகு, தமிழ்நாட்டில் எதற்காக மதுவிலக்குத்துறை? அதற்கு மது விற்பனைத்துறை என்று பெயர் வைத்து நத்தம் விஸ்வநாதனை அமைச்சராக்கலாம்.
தமிழகத்தில் மூன்றாம் தலைமுறையான இளைஞர்கள், மதுவின் பிடியில் சிக்கி உள்ளனர்.
பள்ளி மாணவி மது போதையில் தள்ளாடுவது சமூக வலைத்தளங்களில் வெளிவந்து தமிழ் சமுதாயமே அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், “பண்டைய காலத்திலேயே இறந்துபோன மன்னனை வாழ்த்திப் பாடிய பெண் கவிஞர் ஒருவர், சிறிதளவே என்றாலும், கிடைத்த கள்ளைத் தருவாயே என்று புகழ்ந்துள்ளார்.
அதன்படி பார்க்கும்போது பெண்கவிஞரும் மன்னரிடமிருந்து மது வாங்கி அருந்தியுள்ளார் என்பது புரியும்” என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
பெண்களும் மது அருந்த வேண்டுமென அவர் விரும்புகிறாரா? தமிழக தாய்மார்களையும், சகோதரிகளையும் தரம்தாழ்த்தி, இழிவுபடுத்திப் பேசியிருப்பது தமிழ் பண்பாட்டிற்கு எதிரானது.
தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா என்கின்ற பெண்மணி இருக்கும்போது, அவருடைய அமைச்சரவையில் இருப்பவர் பெண்களை கேவலமாக சித்தரிப்பதை ஜெயலலிதா ஆதரிக்கிறாரா? இல்லை என்றால் வெளிப்படையாக அவரை கண்டித்திருக்க வேண்டுமல்லவா? இனிமேலாவது அமைச்சர் போன்ற உயர்ப தவியில் இருப்பவர்கள் தங்கள் பதவிக்கு தகுந்தவாறு உயர்வான கருத்துக்களை பேசவேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகர் சங்கத்தில் ரூ.1 கோடிக்கு மேல் இருந்த வைப்பு நிதி எங்கே? விஜயகாந்த் அதிரடி கேள்வி
» மதுவிலக்கு கோரிய காந்தியவாதி சசிபெருமாள் மனைவி, மகன்கள், மகள் அதிரடி கைது!
» தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: விஜயகாந்த்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum