Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி திடீர் மரணம்!

Go down

செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி திடீர் மரணம்! Empty செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி திடீர் மரணம்!

Post by oviya Fri Jul 31, 2015 2:31 pm

பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசி பெருமாள், செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற கிராமத்தில் கோயில், பள்ளி இருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.

அதனை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் (60) அந்த ஊர் மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இன்று காலை உண்ணாமலை அவரும், உண்ணாமலை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலனும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மண்எண்ணெய் மற்றும் தீப்பெட்டியுடன் காலை 9.30 மணிக்கு சசிபெருமாள் 500 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறினார்.

அவரைத் தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலனும் டவரில் ஏறினார்.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வருவதற்குள் ஜெயசீலன் டவரில் இருந்து கீழே இறங்கிவிட்டார்.

ஆனால், சசிபெருமாள் மட்டும் டவரில் இருந்துள்ளார். சுமார் ஐந்தரை மணி நேரம் டவரில் இந்த அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

பின்னர் ஒரு வழியாக சசிபெருமாளை காவல்துறையினர் மீட்டனர். அப்போது, சசிபெருமாள் ரத்த வாந்தி எடுத்ததாக தெரிகிறது. அவர் சட்டையில் ரத்தக்கறை படிந்திருந்தது.

மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சசிபெருமாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சசிபெருமாள் திடீர் மரணத்துக்கு காரணம் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரியும் என மருத்துவர்கள் கூறினர்.

மதுவிலக்கு கோரி போராடி வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கூறுகையில், சசிபெருமாள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

சசிபெருமாள் நீண்ட நாட்களாக மதுவிலக்கு கோரி போராடி வருகிறார். உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்.

அண்மைகாலமாக செல்போன் கோபுரங்களில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்.

அவர் தொட்ர்ச்சியாக போராடியும்கூட அரசு அவரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

மேலும், அரசு, ஒரு போராளியின் உயிரை துச்சமாக நினைத்ததாலேயே இந்த அவலம் நடந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum