Top posting users this month
No user |
Similar topics
மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு நாளை காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை
Page 1 of 1

மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு நாளை காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு:
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமனுக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதையடுத்து, யூலை 30ம் திகதி (நாளை) தூக்கில் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரும் யாகூப் மேமனின் மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில்.ஆர்.தவே மற்றும் ஜோசப் குரியன் ஆகியோர் முன்னிலையான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, இரு நீதிபதிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர்.
இந்த மாறுபட்ட நிலைப்பாட்டினால் நாளை (இன்று) இந்த வழக்கின் மீதான விசாரணை மூன்று நீதிபதிகள் கொண்ட பேரமர்வுக்கு மாற்றப்படுகிறது என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, யாகூப் மேனனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, யாகூப் மேனனின் கருணை மனுவினை மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் நிராகரித்துள்ளார்.
இந்நிலையில், தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி யாகூப் மேமன், குடியரசுத் தலைவருக்கு புதிய கருணை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
யாகூப் மேனனுக்கு நாக்பூர் சிறையில் நாளை காலை 7 மணி அளவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முதல் இணைப்பு:
யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதே அப்துல் கலாமுக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என காந்தியின் பேரன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மேற்குவங்க மாநில முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், இந்த தேசமே, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் இத்தருணத்தில், மரண தண்டனையை வெகுவாக எதிர்த்த அவருக்கு செலுத்தும் மரியாதையாக, யாகூப் மேமன் கருணை மனுவை குடியரசுத் தலைவர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
அப்துல் கலாம், ஒரு மாதத்துக்கு முன்னதாக பேசியபோதுகூட, மரண தண்டனையை தான் எதிர்ப்பதாக கூறியிருந்தார். சட்ட ஆணையத்துக்கு அவர் தனது கருத்தை தெளிவாக தெரிவித்திருந்தார்.
எனவே, யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதே கலாமுக்கு செலுத்தும் ஆகச் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.
யாகூப் மேமன் இந்திய நீதித்துறைக்கு தலைவணங்கி சரணடைந்தார். இந்திய உளவுத்துறையின் மரியாதைக்குரிய அதிகாரி ஒருவர் யாகூப் மேமன் விசாரணைக்கு எப்படியெல்லாம் ஒத்துழைத்தார் என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பலரும், யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது நியாயமாகாது என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.
எனவே யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். யாகூப் மேமனை தூக்கிலிட்டால், இந்தியா அமைப்புகளின் நேர்மை நெறி மீது மீளாச் சந்தேகம் ஏற்படும் சூழல் உருவாகும்.
மேதகு குடியரசுத் தலைவரே, ஏற்கெனவே தங்களிடம் 300-க்கும் மேற்பட்ட, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் என பல்துறை சார்ந்த அறிஞர்கள் யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.
15 நாட்களுக்கு முன்னர்தான் சட்ட ஆணையம், தூக்கு தண்டனை தேவையா என்பது குறித்து ஒரு நாள் முழுவதும் ஆலோசனை மேற்கொண்டது.
அந்த கூட்டத்தில் என்ன மாதிரியான முடிவு எட்டப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை.
ஆனால், ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் யாகூப் மேமன் போன்ற கருணைக்காக காத்திருக்கும் பலரது கோரிக்கைக்கும் பின்னால் இருக்கும் நியாயம், சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் வெளியானால் புரியவரும்.
எனது கோரிக்கை மனுவை நீங்கள் பரிசீலனை செய்வீர்கள் என நான் ஆழமாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கும் ஜெயலலிதா: 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு
» 11 மணிக்கு உறுதியான ஜெயலலிதாவின் தலையெழுத்து: நாளை முதல்வராகிறார்?
» நாளை காலை சரணடைகிறேன்…. வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்த யுவராஜ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum