Top posting users this month
No user |
Similar topics
காதலுக்காக 7 பேரை கொலை செய்த ஜோடி: தூக்கு தண்டனை விதித்த உயர்நீதிமன்றம்
Page 1 of 1

உத்திரபிரதேசத்தில் 7 பேரை கொலை செய்த காதல் ஜோடிக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் அருகில் உள்ள பாபன் கேரா கிராமத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியையான ஷபனம் என்பவர், சலீம் என்ற வாலிபரை காதலித்தார். இருவரும் நெருங்கிப் பழகியதில் ஷபனம் கர்ப்பம் ஆனார்.
இது பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் கண்டித்தனர். மேலும் சலீமுடன் பழகுவதற்கும் தடை விதித்தனர்.
இதையடுத்து காதலுக்கு தடையாக உள்ள தனது குடும்பத்தை காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்ட ஷபனம் திட்டமிட்டார்.
அதன்படி, சம்பவத்தன்று இரவு டீயில் மயக்க மருந்தினை, கலந்து பெற்றோர், 2 சகோதரர்கள், மைத்துனி அவர்களது 2 குழந்தைகள் ஆகியோருக்கு கொடுத்துள்ளார்.
அவர்கள் தூங்கியதும் ஷபனம் தனது வீட்டுக்கு காதலனை வரவழைத்தார், இரும்பு கம்பியுடன் வந்த காதலன் சலீம், 6 பேரையும் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.
அதன் பிறகு 10 மாத கைக்குழந்தையை ஷபனம் அடித்து கொன்றுள்ளார்.
கடந்த 2008–ம் ஆண்டு ஏப்ரல் 14–ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது. மொரதாபாத் பொலிசார் விசாரணை நடத்தி ஷபனம்–சலீம் ஜோடியை கைது செய்தனர்.
அவர்கள் மீது செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை அலகாபாத் உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.
தூக்கு தண்டனையை எதிர்த்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இந்த மனு நேற்று தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, அருண் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
ஷபனம், சலீம் ஜோடிக்கு கீழ்நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 3 பேரை திருமணம் செய்த இந்திராணி.. மகள் மிரட்டியதால் எரித்து கொலை: திடுக்கிடும் தகவல்கள்
» 5 பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்!
» மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு நாளை காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum