Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கும் ஜெயலலிதா: 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு

Go down

நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கும் ஜெயலலிதா: 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு Empty நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கும் ஜெயலலிதா: 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு

Post by oviya Fri May 22, 2015 2:18 pm

தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அமைச்சர்கள்

1. திரு ஒ .பன்னீர்செல்வம்

நிதி மற்றும் பொதுப்பணித் துறை (நிதி, திட்டம், சட்டப் பேரவைச் செயலகம், தேர்தல், பொதுப்பணித் துறை)

2. திரு ஆர்.வைத்திலிங்கம்

வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் வேளாண்மை அமைச்சர்

3. திரு எடப்பாடி கே . பழனிசுவாமி

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள், வனத்துறை அமைச்சரர்

4. திரு நத்தம் ஆர் .விஸ்வநாதன்

மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

5.திருமதி பி.வளர்மதி

சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்

6. திரு செல்லூர் கே . ராஜு

கூட்டுறவுத் துறை அமைச்சர்

7. திருமதி. எஸ். கோகுல இந்திரா

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

8. திரு பி .மோகன்

ஊரகத் தொழில் துறை அமைச்சர்

9. திரு பி .பழனியப்பன்

உயர் கல்வித் துறை அமைச்சர்

10. திரு ஆர் .காமராஜ்

உணவு மற்றும் இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர்

11 திரு எம்.சி. சம்பத்

வணிகவரி துறை அமைச்சர்

12. திரு தோப்பு என் .டி . வெங்கடாசலம்

சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

13. திரு டி .பி.பூனாச்சி

காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியம் அமைச்சர்

14. திரு பி .வி . ரமணா

பால்வளத் துறை அமைச்சர்

15. திரு எஸ். பி . சண்முகநாதன்

சுற்றுலாத்துறை அமைச்சர்

16. திரு கே .டி .ராஜேந்திர பாலாஜி

செய்தி, சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்

17. திரு டி.கே.எம். சின்னய்யா

கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்

18. திரு பி.தங்கமணி

தொழில் துறை அமைச்சர்

19. திரு. சுந்தர ராஜ்

இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்

20. திரு. எஸ்.பி.வேலுமணி

நகராட்சி நிர்வாகம், கிராம மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர்

21 கே .சி .வீரமணி

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

22 திரு.சி. விஜய பாஸ்கர்

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

23. திரு வி . செந்தில் பாலாஜி

போக்குவரத்துத் துறை அமைச்சர்

24. திரு கே .ஏ. ஜெயபால்

மீன்வளத்துறை அமைச்சர்

25. முக்கூர் திரு என் .சுப்ரமணியன்

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

26 திரு. என்.சுப்பிரமணியன்

ஆதிதிராவிடார் துறை அமைச்சர்

27. திரு. ஆர்.பி.உதயகுமார்

வருவாய்த் துறை அமைச்சர்

28. எஸ்.அப்துல் ரஹீம்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை



முதல் இணைப்பு:

சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதிமுக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை 7 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சி தலைமைக் கழக அலுவலகத்தில் கூட்டப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேமுதிகவை சேர்ந்த 5 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் சென்றுள்ளனர்.

சுமார் 10 நிமிடங்களே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவை சட்டமன்ற கட்சித் தலைவராக தெரிவு செய்து அதற்கான கடிதத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய 5 அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தமிழக முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா:

இன்று காலை 8 மணியளவில் கிண்டி ராஜ் பவனில் ஆளுனர் ரோசய்யாவை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அளித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அழைப்பு:

பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்ற ஆளுனர், தமிழக அமைச்சரவையை விரைவில் அமைக்கும்படி ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று பிற்பகலில் ஆளுனர் கே.ரோசய்யாவைச் சந்தித்து தனது தலைமையிலான அமைச்சரவையை அமைப்பதற்கும், பேரவை கட்சித் தலைவராக, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் அளித்து அனுமதி கோருகிறார்.

தலைவர் சிலைகளுக்கு மரியாதை:

பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை ஸ்பென்சர் சிக்னல் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.

பின்னர், 1.45 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், 2 மணிக்கு ஜெமினி மேம்பாலம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கும் மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் கட்சி தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

பிரம்மாண்ட ஏற்பாடுகள்:

7 மாதங்களுக்கு பின் கட்சித் தொண்டர்களை ஜெயலலிதா சந்திக்க உள்ளதால் அவரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை காலை பதவியேற்பு:

சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது ஜெயலலிதா 5வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்காக சென்னை பல்கலைக்கழகம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

7,000 பொலிசார் குவிப்பு:

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் சுமார் 7 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum