Top posting users this month
No user |
Similar topics
ஓரினச்சேர்க்கையாளர் மகனுக்கு ஏற்ற மணமகன் தேவை! தாயார் அதிரடி விளம்பரம்
Page 1 of 1

மும்பையைச் சேர்ந்த தாயார் ஒருவர் தனது ஓரினச்சேர்க்கையாளர் மகனுக்கு ஏற்ற மணமகன் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த பத்மா ஐயரின் மகன் ஹரிஷ் ஐயர் (36) ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.
என்ஜிஓ ஒன்றின் தலைவராக உள்ள ஹரிஷ் ஐயர், ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்த பத்மா அவருக்கு ஏற்ற மணமகனை தேடி விளம்பரம் கொடுத்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து அவர் அளித்துள்ள விளம்பரத்தில், 25-40 வயது வரை உள்ள செட்டில் ஆன, விலங்குகளை நேசிக்கும், சைவப் பிரியர் பையன் தேவை (ஜாதி ஒரு பொருட்டல்ல - ஆனால் ஐயராக இருந்தால் விருப்பத்துக்குரியது) என்று விளம்பரம் கொடுத்துள்ளார்.
இந்த விளம்பரத்தை பலரும் வரவேற்றுள்ளனர். இந்த விளம்பரம், இயல்பான ஒன்றுதான், தனது மகனின் ஆசாபாசங்களுக்கு பத்மா ஐயர் கெளரவம் கொடுத்துள்ளார் என்று பலரும் பாராட்டியுள்ளனர்.
இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியுள்ள பத்மா, ஹரிஷ் எனது நிலையை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டதால் இதை பதிவு செய்கிறேன்.
ஓரினச்சேர்க்கையாளர்களின் தாய்மார்கள் ஒன்றும் மகான்கள் இல்லை. அவர்களுக்கும் பிற தாய்மார்களை போன்று பாரபட்சம் எண்ணம் இருக்கலாம்.
என் சகோதரி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துள்ளார். என் இரண்டாவது மகன் அசைவம் சாப்பிடும் மகாராஷ்டிரா பெண்ணை மணந்துள்ளார்.
என் உறவினர் மகள் கிறிஸ்தவரை திருமணம் செய்துள்ளார். அனைவருமே சரிசமமாகவே நடத்தப்படுகின்றனர்.
என் மகனுக்கு வரப் போகும் பையனின் மதம் அல்லது ஜாதி பற்றி எனக்கு கவலை இல்லை.
என் மகன் போடும் நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு, அவருக்கு விரைவில் ஒரு பையன் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஹரிஷ் கூறுகையில், என் திருமணம் சைவ முறைப்படி நடக்கும் என்று நினைக்கிறேன் என்றும், என் திருமணத்தில் அனைத்து மதம் மற்றும் ஜாதிகளின் கலாச்சாரமும் கலந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஓரினச் சேர்க்கையாளருக்கு ஏற்ற மணமகன் தேவை! தாயின் விளம்பரத்தை பார்த்து 73 பேர் ஆர்வம்
» இரண்டரை அடி உயர மணமகன்..3 அடி உயர மணமகள்: மதுரையில் நடந்த அசத்தல் திருமணம்
» விபத்தில் சிக்கிய மணமகன்: மருத்துவமனையில் நடந்த திருமணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum