Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விபத்தில் சிக்கிய மணமகன்: மருத்துவமனையில் நடந்த திருமணம்

Go down

விபத்தில் சிக்கிய மணமகன்: மருத்துவமனையில் நடந்த திருமணம் Empty விபத்தில் சிக்கிய மணமகன்: மருத்துவமனையில் நடந்த திருமணம்

Post by oviya Mon Apr 27, 2015 3:10 pm

திருவனந்தபுரத்தில் திருமணமாக இருந்த மணமகன் விபத்தில் சிக்கியதால் மருத்துவமனையிலேயே திருமணம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்மனாபபுரத்தை சேர்ந்த அப்துல்ரகுமான் (32) என்பவருக்கும் திருவனந்தபுரம் அருகே உள்ள பட்டம் பகுதியை சேர்ந்த ஹசீனா (26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அப்துல் ரகுமான் திருமணத்திற்காக சமீபத்தில் தான் ஊர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், நேற்று திருமணம் நடக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடந்த 1 வாரத்திற்கு முன்பு அப்துல்ரகுமான் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த அவருக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்ததால் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

திருமண நாள் நெருங்கிய போதும் அவர் முழுமையாக குணம் அடையாததால், திருமணத்தை தள்ளி வைக்க பெரியவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஆனால் மணமகள் ஹசீனா குறிப்பிட்ட நாளில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், அவரது விருப்பப்படி அரசு மருத்துவமனையிலேயே திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர்

எனவே நேற்று மருத்துவமனையில் பெரியவர்கள் முன்னிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் வாழ்த்துக்களுடன் அப்துல் ரகுமான்–ஹசீனா திருமணம் நடைபெற்றுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum