Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஓரினச் சேர்க்கையாளருக்கு ஏற்ற மணமகன் தேவை! தாயின் விளம்பரத்தை பார்த்து 73 பேர் ஆர்வம்

Go down

ஓரினச் சேர்க்கையாளருக்கு ஏற்ற மணமகன் தேவை! தாயின் விளம்பரத்தை பார்த்து 73 பேர் ஆர்வம் Empty ஓரினச் சேர்க்கையாளருக்கு ஏற்ற மணமகன் தேவை! தாயின் விளம்பரத்தை பார்த்து 73 பேர் ஆர்வம்

Post by oviya Sun May 24, 2015 3:26 pm

மும்பையைச் சேர்ந்த தாயார் தனது ஓரினச்சேர்க்கையாளர் மகனுக்கு, மணமகன் வேண்டும் என்று கொடுத்த விளம்பரத்தை பார்த்து 73 பேர் தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பத்மா ஐயரின் மகன் ஹரிஷ் ஐயர் (36) ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.

என்ஜிஓ ஒன்றின் தலைவராக உள்ள ஹரிஷ் ஐயர், ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்த பத்மா அவருக்கு ஏற்ற மணமகனை தேடி விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.

அந்த விளம்பரத்துக்கு சில தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், பலர் விளம்பரத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.

இந்த விளம்பரத்தை சமூக வலைதளங்களில் ஹரீஷ் வெளியிட்டதற்கு, பல தரப்பில் இருந்து ஆதரவு குவிந்துள்ளது.

இதுகுறித்து ஹரீஷின் தாய் பத்மா கூறுகையில், விளம்பரத்தைப் பார்த்து இதுவரை ஹரீஷை 70 பேர் தொடர்பு கொண்டு திருமணம் குறித்து பேசியுள்ளனர்.

எனது மகனை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக எனக்கு 73 பேர் இ-மெயில் அனுப்பியுள்ளனர்.

இவ்வளவு மெயில் வந்ததை பார்த்து என் மகன் ஹரீஷ் ஆச்சரியமடைந்துள்ளான் என்று தெரிவித்துள்ளார்.

ஹரீஷ் இதுகுறித்து கூறுகையில், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் என்னை திருமணம் செய்து கொள்ள மெயில் வந்துள்ளது.

தவிர குஜராத்திகள் பலரும் முஸ்லிம்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அபுதாபியில் இருந்து விருப்பம் தெரிவித்துள்ள ஒருவர், திருமணத்துக்குப் பிறகு எனக்கு அவருடைய மாளிகையைக் கொடுப்பதாக கூறியுள்ளார்.

வரன் தேடி விளம்பரம் கொடுத்தால் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஐயருக்கு முன்னுரிமை என்று என் தாய் குறிப்பிட்டதை எதிர்த்து அவருக்கு 300 மெயில்கள் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum