Top posting users this month
No user |
Similar topics
ஆப்கன் தீவிரவாதிகள் பிடியில் இருந்த தமிழக பாதிரியார் விடுதலை: உற்சாக வரவேற்பு
Page 1 of 1

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதையடுத்து அவரது சொந்த ஊரான தேவகோட்டையில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வாரியன் வயல் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்பவரது மகன் அலெக்சிஸ் பிரேம்குமார், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் சென்றார்.
ஆப்கானிஸ்தானில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த பிரேம்குமார் கடந்த ஆண்டு யூன் 2-ம் திகதி தீவிரவாதிகளால் ஹெராத் பகுதியில் கடத்தப்பட்டார்.
அவரை பத்திரமாக மீட்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து பாதிரியாரை மீட்க ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் அலெக்ஸிஸ் பிரேம் குமார் 8 மாதங்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார் விடுவிக்கப்பட்ட இந்தத் தகவலை, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட இந்திய பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் விடுவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமாரிடம் பேசினேன், அவர் நலமுடன் பாதுகாப்பாக இருக்கிறார்.
8 மாதங்களுக்குப் பிறகு அவர் திரும்பும் தகவல், அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
அலெக்சிஸ் பிரேம்குமார் விடுதலை செய்யப்பட்டதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், விடுவிக்கப்பட்ட பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் டெல்லி வந்ததும் அவரை ஏசு சபையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், தன்னை விடுதலை செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதற்காக பாடுபட்ட இந்திய அரசுக்கும், பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பின்னர் தேவகோட்டை வரும் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமெரிக்காவில் விருது பெற்ற தமிழக பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு
» ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 2 இந்தியர்கள் இந்தியா வருகை
» இந்தியா வந்துள்ள ஜேர்மன் சான்சலருக்கு உற்சாக வரவேற்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum