Top posting users this month
No user |
அமெரிக்காவில் விருது பெற்ற தமிழக பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு
Page 1 of 1

அமெரிக்காவில் இயங்கிவரும் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு சேவையாற்றும் ‘சீகாலஜி’ தொண்டு நிறுவனத்தின் விருதை பெற்று திரும்பிய தமிழகத்தின் லட்சுமிக்கு பாம்பனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சிக்குட்பட்ட சின்னபாலத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி லட்சுமி(47).
இவர் ஏர்வாடி கடலோரப்பகுதி முதல் ராமேசுவரம் வரை வசிக்கும் மீனவப்பெண்களை ஒருங்கிணைத்து கடலில் பாசி எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தியும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியும் வந்தார்.
லட்சுமியின் சேவையை பாராட்டி ராமேசுவரத்தை சேர்ந்த ‘பேடு’ என்ற தொண்டு நிறுவனம் சிறந்த மீனவப்பெண்ணாக லட்சுமியை தேரிவு செய்தது.
மேலும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்க்கிலின் நகரில் செயல்பட்டு வரும் சீகாலஜி என்ற கடல்வள பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தின் விருதுக்கும் பரிந்துரை செய்தது.
உலக அளவில் கடல் வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இந்த நிறுவனம் லட்சுமியை சிறந்த மீனவப் பெண்ணாக தேர்வு செய்து விருது வழங்குவதாக அறிவித்தது.
இதற்காக அமெரிக்கா சென்ற லட்சுமி, அங்கு 8–ந்தேதி நடந்த கடல்வள பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு விருது மற்றும் பரிசு பெற்று நாடு திரும்பினார்.
சென்னையில் இருந்து ரயில் மூலம் நேற்று பாம்பனுக்கு வந்த லட்சுமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விருது பெற்று திரும்பிய லட்சுமி இது தொடர்பாக கூறியதாவது, நான் சிறுவயதில் இருந்தே கடலோர பகுதியில் மீன் பிடிக்க செல்வேன் அதனால் கடல்வளம் குறித்து நல்ல அனுபவம் கிடைத்தது.
அதன் மூலம் மீனவப்பெண்களை ஒருங்கிணைத்து கடல் பாசி எடுக்கும் தொழிலை கற்றுக் கொடுத்தேன்.
அது அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தியதோடு, கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum