Top posting users this month
No user |
Similar topics
கொடுமையால் சிதைந்த பிஞ்சுகள்: உதவிக்கரம் நீட்டிய மருத்துவர்கள்
Page 1 of 1

திருவண்ணாமலை மாவட்டத்தில் சித்தி கொடுமையால் சிதைந்த பிஞ்சுகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோருக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை பே-கோபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் விமல்ராஜ், லோகேஸ்வரி. இவர்களுக்கு அஸ்வினி (4½) என்ற மகளும், அஸ்வின் (3½) என்ற மகனும் உள்ளனர்.
சென்னையில் இவர்கள் கூலித்தொழில் செய்து வருவதால், குடியாத்தத்தை அடுத்த கொத்தமாரிகுப்பம் கிராமத்தில் உள்ள தனது தங்கை முத்துலட்சுமியிடம் குழந்தைகளை வளர்க்குமாறு லோகேஸ்வரி கொடுத்திருக்கிறார்.
முத்துலட்சுமி, குழந்தைகளை கொடுமை செய்வதாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜூக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
உடனே விமல்ராஜ், தனது மனைவி லோகேஸ்வரியுடன் குடியாத்தம் வந்து பார்த்த போது, தன் குழந்தைகள் அடையாளம் தெரியாதபடி மெலிந்தும், உடல் முழுவதும் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து முத்துலட்சுமியிடம் அவர்கள் விசாரித்த போது அவர் சரியான பதில் கூறவில்லை.
உடனே அவர்கள் குழந்தைகளை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபின் நேற்று வீடு திரும்பி உள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் கூறுகையில், சிறுமி அஸ்வினிக்கு கண்கள் பாதிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. அவரது இடது கைவிரலின் எலும்பு முறிந்திருந்தது, அவையும் தற்போது இணைந்து குணமடைந்துவிட்டது.
அதேபோல் அஸ்வின் காலில் வெந்நீர் ஊற்றப்பட்டு இருந்த காயங்கள் குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் பெற்றோருக்கு இந்த மருத்துவமனையிலேயே முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் கல்விக்கு ஏற்ற வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் குழந்தைகளின் படிப்புக்கு இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் நன்கொடை வசூல் செய்து நிதியுதவி வழங்கவும் முடிவு செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சென்னையில் பரவும் புதிய வகை கண் நோய்: மருத்துவர்கள் எச்சரிக்கை
» விபத்தில் இழந்த கைகளை மீண்டும் பொருத்தி மருத்துவர்கள் சாதனை
» சசி பெருமாள் உடலில் ரத்தம் வந்தது எப்படி? மருத்துவர்கள் விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum