Top posting users this month
No user |
ரஷ்யாவை சேர்ந்த சிறுமிக்கு தமிழக இதயம்: மருத்துவர்கள் சாதனை
Page 1 of 1

சென்னையில் ரஷ்யாவை சேர்ந்த சிறுமிக்கு தமிழகத்தை சேர்ந்த சிறுவனின் இதயத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சைபீரியாவைச் சேர்ந்த விக்டோரியா என்ற 10 வயதுச் சிறுமி Restrictive Cardio Myopathy என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் விக்டோரியா பிழைப்பது அரிது என்று மருத்துவர்கள் கூறியதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரஷ்யா நாட்டின் மருத்துவச் சட்டப்படி, மழலையரின் உடம்பில் அங்க மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதி கிடையாது.
இந்நிலையில், தரமான இதய மாற்று அறுவை சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குறித்து இணையத்தில் தேடியபோது தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி மருத்துவர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை பற்றி தெரியவந்துள்ளது.
எனவே விக்டோரியாவின் குடும்பத்தினர், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து விண்ணப்பித்துள்ளனர்.
இந்தியாவில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான அனுமதியை புதின் வழங்கியுள்ளார்.
கடந்த மாதம் திருவாரூர் அருகே, சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், விக்டோரியாவுடன் குடும்பத்தினர் சென்னை வந்து, மருத்துவமனையில் விக்டோரியாவை அனுமதித்துள்ளனர்.
பின்னர், அந்த சிறுவனின் இருதயத்தை விக்டோரியாவின் உடலில் பொருத்தி பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழு சாதனை படைத்துள்ளனர்.
விக்டோரியாவின் தாயார் கூறுகையில், எங்களின் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
என் மகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய மருத்துவர்களுக்கும், அவள் வாழ, தன் மகனின் இதயத்தை அளித்த அந்தத் தாய்க்கும் நாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum