Top posting users this month
No user |
Similar topics
காலியாக இருக்கும் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்க கஜானாவை நிரப்பப்போவது யார்?
Page 1 of 1

7 வருடங்கள் ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்த ஸ்ரீரங்கத்தில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியான ஸ்ரீரங்கம்
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவியும், முதல்வர் பதவியும் பறிபோனது.
இதனால், ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல்
ஸ்ரீரங்கம் காலியானதைத் தொடர்ந்து, அந்த கோட்டையை ஆளப்போவது யார் என்று தீர்மானிக்காமல் பல மாதங்கள் இழுபட்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 13ம் திகதி ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
சூடுபிடிக்கும் தேர்தல்
திமுக சார்பில் ஆனந்த், அதிமுக சார்பில் வளர்மதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வேட்பாளரை பொது வேட்பாளராகக் கருதி ஆதரிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.
ஆனால், அவரது வேண்டுகோளை புறந்தள்ளி, பாமக, மதிமுக ஆகியவை யாரையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவை அறிவித்துவிட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
இதேபோல், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, புதிய கட்சியைத் தொடங்கியுள்ள ஜி.கே. வாசன், இத்தேர்தலில் தங்களது கட்சி போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.
பாஜக - தேமுதிக அணி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் வேட்பாளர் குறித்த விபரம் வெளியிடப்படவில்லை.
இடதுசாரிக் கட்சிகளின் மாநில மாநாடுகள் தனித்தனியே நடைபெறவுள்ளதால் அக்கட்சிகள் உறுதியான முடிவெடுக்க முடியாமல் உள்ளன.
ஸ்ரீரங்கத்தில் நிலவும் இத்தகைய அரசியல் சூழ்நிலையால், அங்கு அதிமுகவும், திமுகவும் பெரிய கட்சிகளின் ஆதரவின்றி இடைத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
எனவே, இரண்டு கட்சிகளும் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் மூலமாக தங்களது தனிப்பெரும் பலத்தை நிரூபிக்க கடுமையாகப் போராட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்த கோட்டையை ஆளப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ரீரங்க கோட்டையை ஜெயலலிதா கைப்பற்றியதன் பின்னணி என்ன?
» ஜெயலலிதாவின் வழக்கு விசாரணை ஆரம்பம்!
» ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியின் ரகசியம்
» ஜெயலலிதாவின் வழக்கு விசாரணை ஆரம்பம்!
» ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியின் ரகசியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum