Top posting users this month
No user |
Similar topics
ஸ்ரீரங்க கோட்டையை ஜெயலலிதா கைப்பற்றியதன் பின்னணி என்ன?
Page 1 of 1

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது அதிமுக.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதால் முதல்வர் பதவியையையும், ஸ்ரீரங்கத்தின் எம்எல்ஏ பதவியையும் இழந்தார்.
இடைத்தேர்தலும், வேட்பாளர்களும்
ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதைத் தொடர்ந்து, பிப்ரவரி 13ம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் திகதி அறிவித்த, மறுநிமிடமே அனைத்து கட்சிகளும் ஸ்ரீரங்கத்தை பிடிப்பதற்கு கூட்டத்தை நடத்தின.
இதில், திமுக கட்சி, தேர்தல் திகதி அறிவித்த அடுத்தநாளே, தனது வேட்பாளர் ஆனந்தை அறிவித்து பிரசாரத்திலும் ஈடுபட்டது.
பாஜக, தேமுதிக, பாமக ஆகியவை கூட்டணி கட்சி என்பதால் யார் களமிறங்குவது என்பது குழப்பத்தில் இருந்தது. தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு கிடையாது என அறிவித்துவிட்டு விலகிக்கொண்டது பாமக.
பின்னர், தேமுதிக கட்சி சார்பில் விஜயகாந்த் வாய் திறக்காமல் இருக்க, கட்சிக்குள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர், பாஜக தனது வேட்பாளர் சுப்பிரமணியத்தை அறிவித்தது.
பின்னர், அதிமுக கட்சி சார்பாக வளர்மதியை அறிவித்தார் ஜெயலலிதா. அதிமுகவிற்கு வழக்கம்போல், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது ஆதரவை தெரிவித்து, பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வந்தது, அக்கட்சியின் சார்பாக குஷ்பு களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்ட்டது, ஆனால், தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சி அறிவித்துவிட்டது.
மேலும், டிராபிக் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
பிரசாரமும், பணப்பட்டுவாடாவும்
பக்திமயமாக காட்சியளித்த ஸ்ரீரங்கம், தேர்தலை ஒட்டி பணமயமாக மாறிவிட்டது. பார்க்கும் இடமெல்லாம் கட்சிக்கொடிகள், மேடைகள், பரபரப்பான வாகனங்கள் என்று ஊரே திருவிழாக்கோலம் பூண்டது.
திமுக சார்பில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி உட்பட பலர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக சார்பில், அம்மாவின் குரல் ஸ்ரீரங்கத்தில் உள்ள மூலை முடுக்கெல்லாம் ஒளிபரப்பப்பட்டது, மேலும் நடிகை விந்தியா, சத்துணவு அமைச்சர் வளர்மதி, கூட்டுறவு அமைச்சர் என பலர் களமிறங்கினர்.
பாஜக சார்பாக அக்கட்சியின் தலைவர் தமிழிசை சௌர்ந்தர்ராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார், ஆனால், விஜயகாந்தும் பாஜக சார்பாக வருவார் என்று அக்கட்சி மட்டுமல்லாது, தேமுதிக தொண்டர்களும் எதிர்பார்த்தனர்.
பாஜக சார்பாக தூதும் அனுப்பப்பட்டது, ஆனால் அவற்றையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத விஜயகாந்த், கடைசிவரை பிரசாரத்திற்கு வரவில்லை.
பிரசாரத்தின் போது திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஊழலை குற்றம்சாட்டி பிரசாரம் செய்தனர், பாஜக இவ்விருகட்சிகளின் ஊழலையும் குற்றம்சாட்டி பேசியது.
இதில், திமுகவும், அதிமுகவும் பணம், மட்டன் பிரியாணி என்று தங்களால் இயன்ற அளவு மக்களுக்கு வாரி வழங்கினர். மக்களும் கிடைத்தவரை லாபம் என்று கொடுக்கும் பணங்களை வாங்கிகொண்டனர்.
வெற்றியை நிலைநாட்டிய அதிமுக
பிப்ரவரி 16ம் திகதி வெளியான தேர்தல் முடிவுகளில், அதிமுக கட்சி 1,51,561 வாக்குகள் பெற்று ஸ்ரீரங்க கோட்டையை கைப்பற்றியது.
திமுக கட்சி 55,045 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. மற்ற கட்சிகள் டெபாசிட் இழந்தது.
ஊழல் குற்றத்தில் சிறைக்கு சென்றாலும், மக்களின் நம்பிக்கை அம்மாவின் மேல் இப்போதும் உள்ளது என்பதை காட்டியுள்ளது இத்தேர்தல்.
ஆனால், அது மக்களின் அனுதாப ஓட்டுகளா என்பது ஓட்டுப்போட்ட மக்களுக்கு தான் தெரியும்.
டெல்லியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியை ஜெயிக்க வைத்து, அரசியல் உலகில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தனர் மக்கள்.
ஆனால், ஸ்ரீரங்கம் தேர்தலில் மாற்றத்தை மக்கள் கொண்டுவரவேண்டும் என்று நினைத்தாலும், தலைவர்கள் செய்த ஊழல்கள் மக்களை விழிபிதுங்க வைத்துவிடுகின்றன.
யாருக்குத்தான் ஓட்டு போடுவது, திரும்பியபக்கமெல்லாம் ஊழலாக இருக்கிறது, ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட்டால் கிடைத்துக்கொண்டிருப்பதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையிலே இத்தேர்தலில் ஓட்டுப்போட்டிருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது.
அல்லது, இது தமிழக மக்களின் அனுதாபமா? பணம் செய்த வேலையா?

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரஜினிக்கு எதிராக தூண்டிவிடப்படும் ஜெயலலிதா: பின்னணி என்ன?
» கார்த்திகாவின் கொலையின் பின்னணி என்ன? கைதானவர் கணவரா?
» தோழியின் குளியலறையில் மொடல் அழகி மரணம்: பின்னணி என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum