Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியின் ரகசியம்
Page 1 of 1
ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியின் ரகசியம்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அமோக வெற்றிபெற்றுள்ளார், இந்த வெற்றி அனைவரும் எதிர்பார்த்ததுதான்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தவிர மற்ற திமுக, தேமுதிக, மதிமுக, பாமக, பாஜ, காங்கிரஸ், தமாகா, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.
அதுக்கு பல காரணங்களை சொன்னாலும் சொல்லாத காரணங்களில் சில ஜெயலலிதா இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெறுவார் என்பதை இந்த கட்சிகள் மட்டுமல்ல அனைத்து அரசியல் தரப்பும் அறிந்திருந்தன.
அதேபோல் இந்த தேர்தலில் வாக்குகளை குறைவாக பெற்றால் வரும் தமிழக பொதுதேர்தலில் கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படும் மற்றும் கூட்டணி அமைக்க கட்சிகளுக்கு தமது பலவீனம் தெரிந்துவிடும் என்பதும் இந்த கட்சிகள் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்க காரணமாக அமைந்தது.
தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக தற்போதும் பலமாகவே இருந்து வருகிறது.
கடந்த 2014 நாடாளுமன்ற பொதுதேர்தலில் எந்த கட்சியோடும் கூட்டணி சேராமல் தனியொரு கட்சியாக அதிமுக 37 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.
மூன்றாம் அணி கட்சிகள் அந்த தேர்தலில் வெற்றி பெற்றால், மூன்றாம் அணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைத்து பிரதமர் பதவியை பெறுவது அல்லது நாடாளுமன்றத்தில் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக அதிமுக இருக்கவேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளை ஓரங்கட்டினார்.
எனினும் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மை பலத்தை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.
இவ்வாறான சூழ்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களுர் நீதிமன்றம் தண்டனை வழங்கியதை அடுத்து, அவர் முதல்வர் பதவியை இழந்தார்.
இதனால், மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு அதிகரித்தது. மேலும் ஜெயலலிதாவின் கடந்த இரண்டு முறை ஆட்சிக்காலத்தை விட இந்த முறை அவரது ஆட்சி தொடர்பாக மக்கள் திருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவின்கடந்த ஆட்சியில் மத்திய மற்றும் மாநில அளவில் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிப்தி காரணமாக அதிமுக மக்கள் மனதில் மீள இடம்பிடித்தது.
இதனை அதிமுக தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டதுடன் திமுக ஆட்சியில் இல்லாத அளவில் மக்கள் நல, இலவச திட்டங்களை அதிமுக அரசு செயற்படுத்த ஆரம்பித்தது.
அம்மா உணவகம், அம்மா மருந்தகம், சிறிய பேருந்து , மழைநீர் சேகரிப்பு, மகளிர் சுய உதவிக்குழு, மக்கள் குறைதீர் கூட்டம், மாணவர்களுக்கு இலவச மடிகணனி, சைக்கிள் குடுப்பத்தினருக்கும் இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், இலவச கால்நடைகள் என பல்வேறு இலவசங்களை அதிமுக அறிவித்ததுடன் செயற்படுத்தியும் வருகிறது.
ரியல் எஸ்டேட்டின் அபாய வளர்ச்சியை கட்டுப்படுத்தியது. இலங்கை கடற்படையினரிடம் மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை, ஈழத்தமிழர் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை ஜெயலலிதா வெளியிட்டமையும் அவருக்கு கட்சி சாரா தமிழ் இன உணவாளர்கள் மத்தியில் ஓரளவு ஆதரவை அதிகரிக்க செய்தது.
இதனை தவிர முல்லைப் பெரியாறு, காவேரி பிரச்சனைகளில் உறுதியான நடவடிக்கை என்பனவும் ஜெயலலிதா மீதான மக்கள் ஆதரவை அதிகரிக்க செய்ததாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
அது மாத்திரமல்லாது அதிமுகவை முதல்வர் ஜெயலலிதா தலைமைக்கு கட்டுப்படும் கட்சியாக மாற்றியமைத்தையும் அவரது வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.
அதிமுகவுக்கு முன்பு இரண்டு முறை தமிழகத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தபோதும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி சிறப்பான ஆட்சியல்ல என்பதை உணர்ந்த மக்கள் அடுத்த இருமுறை திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்தனர்.
திமுக ஆட்சியின் மீது சலிப்படைந்த மக்கள் , மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.
ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நல்லவர்களாக தம்மை காட்டிக்கொண்டு நற்செயற்திட்டங்களை மக்களுக்கு வழங்கினாலும் மக்கள் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி கொண்டால் அடுத்த தேர்தலில் தமது தீர்ப்பை வழங்கி விடுவர்.
அரசியல்வாதிகள் தமக்கு அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவரும் இல்லை என்று கூறுவர்.
ஆனால் மக்கள் மன்றம் என்பது வேறானது, மக்கள் ஆட்சியாளர் மீது அதிருப்தியடைந்தால், தேர்தலில் அதனை வெளிக்காட்டுவார்கள்.
இதனால், நிரந்தரமாக மக்கள் ஆதரவை பெறும் கட்சியுமில்லை நிரந்தமாக மக்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் கட்சிகளும் இல்லை.
இவ்வாறான நிலையில், தனது மூன்றாவது ஆட்சியிலும் தாம் மக்களை ஏமாற்ற நினைத்தால், தேர்தலில் மக்கள் தரும் தீர்ப்புக்கு அஞ்சி நல்லாட்சியை நடத்த ஜெயலலிதா முடிவு செய்திருக்கலாம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண்களே அதிகளவில் ஆதரவளித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் வெற்றிகளுக்கு என்றும் குறைந்து போகா முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மங்கா புகழும் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
எம்.ஜி.ஆர் மதுவிலக்கை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார். அதேபோல் தற்போதைய தமிழக முதல்வர், அரசாங்கம் வருமானத்தை எதிர்பார்க்காமல் தமிழகத்தை சீரழிக்கும் மது விற்பனை நிலையங்களை மூடி மதுவை ஒழித்தால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவின் ஆட்சி தொடர்வதை எந்த அரசியல் சக்தியாலும் தடுக்க முடியாது என்பது உறுதியானது.
இது, அதிமுக அடுத்தும் தமிழகத்தை ஆட்சி செய்ய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தலுக்குத் தேர்தல் இரட்டிப்பாகும் ஜெயலலிதாவின் சொத்துமதிப்பு: வேட்பு மனுவில் தகவல்!
» சாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்)
» வெற்றியின் ரகசியம் வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?
» சாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்)
» வெற்றியின் ரகசியம் வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum