Top posting users this month
No user |
Similar topics
சுனந்தாவின் மரணம்: ஐபிஎல் முறைகேடு காரணமா? வெடிக்கும் சர்ச்சை
Page 1 of 1

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா மரணத்தின் பின்னணியில் ஐ.பி.எல். முறைகேடுகள் காரணமாக இருக்கலாம் என்று திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது டெல்லி பொலிசார் சுனந்தா கொலை செய்யப்பட்டார் என்று அறிவித்த நிலையில், ஐ.பி.எல். முறைகேடுகளை பத்திரிகையாளர்களிட அம்பலப்படுத்த இருந்ததால் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 14-ந் திகதியன்று சுனந்தாவும் சசி தரூரும் கேரளாவில் இருந்து டெல்லி திரும்பியுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் சுனந்தாவை இழுத்து காரில் தள்ள சசி தரூர் முயற்சிக்க அப்போது சுனந்தா அறைந்ததை பலர் பார்த்துள்ளனர். பின்னர் சசி தரூர் மட்டும் விமான நிலையத்தில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் தனியாக இருந்த சுனந்தா, தொழிலதிபரும் நெருங்கிய நண்பருமான சுனில் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார்.
பின்னர் விமான நிலையம் வந்த சுனில், சுனந்தாவை அழைத்துக் கொண்டு டெல்லி ஹொட்டலுக்கு சென்றுள்ளார்.
அங்கு அறை எண் 307-ல் இருவரும் தங்கியுள்ளனர். அப்போது ஐ.பி.எல். குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது. இந்த தகவல்களை சசி தரூரின் உதவியாளர் நரேன், டெல்லி பொலிசார் நடத்திய விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சுனிலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஐ.பி.எல். முறைகேடு தொடர்பாக ஜனவரி 17-ந் திகதியன்று பத்திரிகையாளர்களை சுனந்தா சந்திக்க இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு முதல்நாள்தான் சுனந்தா உயிரிழந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சுனந்தாவுடன் தொடர்பில் இருந்த பத்திரிகையாளர் நளினிசிங்கும் தன்னிடம் சுனந்தா ஐ.பி.எல். தொடர்பாக பேசியதாக கூறியுள்ளார். இதனால் ஐ.பி.எல். விவகாரங்களினாலேயே சுனந்தா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் டெல்லி பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.பி.எல். போட்டிகளுக்கான கொச்சி அணியின் பங்குகளை ரூ70 கோடி கொடுத்து வாங்கியது தொடர்பான சர்ச்சையில் சசி தரூரும் சுனந்தாவும் சிக்கியதால் சசி தரூர் தமது மத்திய அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுனந்தாவின் மரணம் கொலையா? சசிதரூர் அதிரடி கேள்வி
» திருநங்கைகளை ஆட வைப்பதா? அதிகாரிகள் ஆட வேண்டியதுதானே: வெடிக்கும் சர்ச்சை
» ”ஒரு பெண்ணாக இருந்தும் கூட...” மோடி பேச்சால் வெடிக்கும் சர்ச்சை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum