Top posting users this month
No user |
Similar topics
திருநங்கைகளை ஆட வைப்பதா? அதிகாரிகள் ஆட வேண்டியதுதானே: வெடிக்கும் சர்ச்சை
Page 1 of 1

சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றின் முன்பு சொத்துவரி பாக்கியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திருநங்கைகளை நடனமாட வைத்த சம்பவம் திருநங்கைகள் மத்தியில் மட்டுமல்லாது, சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டல் முன்பு வெள்ளிக்கிழமையன்று சொத்துவரி பாக்கியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 2 திருநங்கைகளை அழைத்துவந்து நடனமாட வைத்துள்ளனர்.
இதனையடுத்து ஹொட்டல் நிர்வாகத்தினர், 33 லட்ச ரூபாய் வரிபாக்கியை ஒரே செக்கில் அளித்துள்ளனர்.
ஸ்டாலின் கண்டனம்
திருநங்கைகளை நடனமாட வைத்து சொத்து வரி வசூலித்த சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருநங்கைகளை மனிதாபிமானமற்ற முறையில் சென்னை மாநகராட்சி ஈடுபடுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர், திமுக ஆட்சி காலத்தில் திருநங்கைகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து, அவர்களுக்கு சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தி கொடுத்தது.
ஆனால் சென்னை மாநகராட்சியின் இந்தச் செயல் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.
பாமக ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் மாநகராட்சியின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது திருநங்கைகளை கொச்சைப் படுத்தும் செயல், இது கடுமையான மனித உரிமை மீறல் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக திருநங்கைகள் செயல்பாட்டாளர் `இப்படிக்கு ரோஸ்` கூறியுள்ளதாவது, அரசு அதிகாரிகள் செய்யவேண்டிய வேலைக்கு திருநங்கைகள் எதற்கு? அவர்களே அதை செய்துவிட்டு போகலாமே.
வரியை வசூலிக்கும் அளவிற்கு அதிகாரிகள் செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
இவ்வாறு ஆடித்தான் வரியை வசூலிக்க முடியும் என்றால் அரசு அதிகாரிகளே ஆடி வசூலிக்க வேண்டியதுதானே.?
வெறுமனே இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதை தவிர்த்துவிட்டு திருநங்கைகளுக்கு நிரந்தர அரசு வேலை தரவேண்டும். எனவே மீண்டும் இது போன்று நிகழ்வுகள் நடக்க கூடாது, நடந்தால் திருநங்கைகள் பொறுமை காக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமைச்சருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பொலிசார்: வெடிக்கும் சர்ச்சை
» சுனந்தாவின் மரணம்: ஐபிஎல் முறைகேடு காரணமா? வெடிக்கும் சர்ச்சை
» காந்தி படம் இல்லாமல் புதிதாக அச்சிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுக்கள்? வெடிக்கும் சர்ச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum