Top posting users this month
No user |
இந்தியா இளைஞர்கள் நிறைந்த நாடு..வேற்றுமையே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி
Page 1 of 1

பிரதமர் மோடி லண்டன் வெம்பிளி மைதானத்தில் 60 ஆயிரம் இந்தியர்களிடையே சுமார் 2 மணிநேரம் உரையாற்றியுள்ளார்.
பிரதமர் மோடி லண்டனில் இந்தியர்கள் முன் பேசுகையில், இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இந்த மைதானத்தில் கூடியுள்ள அனைவருக்கும் என் நன்றி.
உங்களது அன்பார்ந்த வரவேற்பு நம் சொந்த நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது.
நீங்கள் அனைவரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன்.
லண்டன் மிகவும் குளிராக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் 8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்ச்சியாக இருக்கும் என நினைக்கவில்லை.
குஜராத் முதல்வராக 2003ம் ஆண்டு இங்கே நான் உங்களை சந்தித்தேன்.
அப்போது தேம்ஸ் நதிக்கரையில் வெள்ளம் கரை புரண்டோடியது. இப்போது நான் கூடுதல் பொறுப்புடன் இங்கே வருகை தந்துள்ளேன்.
இந்தியா தன்னுடைய கனவுகளை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
இந்தியாவில் ஏழைகள் இருப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. இதைத்தான் கடந்த 18 மாத கால அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.
இந்தியாவில் 65% பேர் 35 வயதுக்கும் குறைவானவர்கள். இந்தியா இளைஞர்கள் நிறைந்த நாடு. இந்தியா ஒருபோதும் பின் தங்கிய நாடாகிவிட முடியாது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் முன்பாக நம்முடைய மகாத்மா காந்தி சிலை இருப்பதை பார்க்கிற எந்த ஒரு இந்தியனும் பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியுமா?
வேற்றுமைகள் கொண்ட இந்தியாவில் அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழ்வதைப் பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.
100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வேற்றுமைகளுக்கு நடுவே எப்படி அமைதியாக வாழ்கிறார்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள்.
இந்தியா விடுதலை பெற்று பல ஆண்டுகளாகியும் மின்சாரம் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன.
இதனை மாற்றுவதற்கு நான் பாடுபட வேண்டாமா? இந்தியா விடுதலை பெற்று 70 ஆண்டுகாலமாகியும் இன்னமும் 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை.
நாங்கள் அடுத்த 1000 நாளில் இந்த கிராமங்களுக்கு மின்சாரத்தை கிடைக்க செய்வோம்.
எங்களைப் பொறுத்தவரை 2 எஃப்.பி.டி.ஐக்களை சமமாக பார்க்கிறோம். ஒன்று நேரடி அன்னிய முதலீடு; 2வது இந்தியாவின் வளர்ச்சி முதலில் என்பது (Foreign Direct Investment, First Develop India).
எனக்கு 2 கனவுகள் உண்டு. ஒன்று சுகாதாரத்தைப் பேணுவது; 24 மணிநேரமும் மின்சார விநியோகம் இருக்க வேண்டும் என்பது. நம்மிடம் சூரிய சக்தி, காற்று சக்தி இருக்கிறது.
2019ம் ஆண்டுக்குள் இந்த 2 கனவுகளும் நிறைவேறும் என நம்புகிறேன். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளில் இந்தியாவின் அனைத்து கிராமங்களுமே மின்சார வசதியைப் பெறுவதற்கான திட்டங்களைத் தீட்டியுள்ளோம்.
உலக நாடுகள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியா பங்களிக்க தயாராக இருக்கிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் விசா உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண டிஜிட்டல் மயமாக்கியுள்ளோம்.
வரும் டிசம்பர் மாதம் முதல் லண்டன் - அகமதாபாத் இடையே நேரடியாக ஏர் இந்தியா விமான சேவை இயக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum