Top posting users this month
No user |
இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் இருக்கும்: பிரதமர் மோடி
Page 1 of 1

இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு:
மூன்று நாள் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று காலை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
பின்னர் இருநாட்டு பிரதமர்களும் பத்திரிகையாளர்களை கூட்டாக சந்தித்த போது பேசிய பிரதமர் மோடி, இலங்கை பிரதமரையும் அவருடன் வந்திருக்கும் குழுவினரையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கை தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றமைக்கு எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
இந்திய - இலங்கை உறவில் இந்த ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்கது. முதலில் இலங்கை அதிபர் சிறிசேனா பதவியேற்புக்கு பின்னர் தனது முதல் வெளிநாட்டுப்பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டார்.
பின்னர், நான் இலங்கை சென்றேன். தற்போது, இலங்கை பிரதமர் ரணில் இந்தியாவுக்கு தனது முதல் வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தியா - இலங்கை நட்புறவு மிகவும் வலுவானது. இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் அந்நாடு அமைதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய கொள்கைகளுடன் வளமான எதிர்காலத்தை நோக்கி நகர்ந்துவருகிறது என்பதை உணர்த்துகிறது.
இலங்கை அரசு அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துவதோடு, இந்தியாவின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கையின் வளர்ச்சி தெற்காசிய பிராந்திய வளர்ச்சிக்கு வித்திடுவதோடு, இந்தியா - இலங்கை கடல்சார் நட்புறவுக்கும் வித்திடும்.
இருநாட்டு நட்புறவு குறித்து எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக அமைந்தது.
இலங்கையில் கட்டுமானம், எரிசக்தி, போக்குவரத்து துறையில் முதலீடு செய்ய விரும்பும் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இலங்கை பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.
இலங்கையின் உட்கட்டுமானம், ரயில்வே, எரிசக்தி, சமூக மேம்பாட்டு திட்டங்கள், விவசாயம், அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆகிய துறைகளில் இந்தியாவின் நட்புறவு தொடரும்.
பாதுகாப்பு பயிற்சித் துறையில் இலங்கை, இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக திகழ்கிறது.
இலங்கை வீரர்களுக்கு தொடர்ந்து இந்தியா பாதுகாப்பு துறைசார் பயிற்சி வழங்கும்.
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியா இலங்கை கூட்டுறவு தீவிரப்படுத்தப்படும். கடல் எல்லையில் இருநாட்டு பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.
இலங்கை, இந்திய மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் உடன்படுகிறோம்.
மேலும், மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகவேண்டும் என இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தினேன் என்று மோடி பேசியுள்ளார்.
முதல் இணைப்பு:
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கவுள்ளார்.
இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.
டெல்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகையில் இன்று மதியம், பிரதமர் மோடியை அவர் சந்திக்கிறார்.
சந்திப்புக்கு பின்னர் நண்பகல் 12.30 மணியளவில், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.
அப்போது சந்திப்பில் பேசப்பட்ட முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல் தெரிவிக்கப்படும்.
இந்த சந்திப்பின் போது மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினை, ஆகியவற்றை பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum