Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஹர்திக் படேலை காணவில்லை! ஆதரவாளர்கள் பரபரப்பு புகார்

Go down

ஹர்திக் படேலை காணவில்லை! ஆதரவாளர்கள் பரபரப்பு புகார் Empty ஹர்திக் படேலை காணவில்லை! ஆதரவாளர்கள் பரபரப்பு புகார்

Post by oviya Wed Sep 23, 2015 1:38 pm

ஹர்திக் படேல் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் அவரை காணவில்லை என நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
குஜராத்தில் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அல்லது யாருக்குமே இடஒதுக்கீடு தரக் கூடாது என்ற முழக்கத்தை முன்வைத்து ஹர்திக் படேல் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போது பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடஒதுக்கீடு தொடர்பான ஹர்திக் போராட்டங்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதில் பாஜக தீவிரமாக உள்ளது.

இதனால் ஹர்திக் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி மறுத்து வருகிறது குஜராத் அரசு.

இந்நிலையில் குஜராத்தின் பயத் தாலுகாவில் தென்பூர் என்ற கிராமத்தில் தடையை மீறி ஹர்திக் படேல் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

அந்த கூட்டம் முடிந்ததும் அவரைக் கைது செய்ய பொலிசார் முயன்ற போது ஹர்திக் படேல் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் நேற்று இரவு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம், ஹர்திக் படேலை காணவில்லை, அவரை பொலிசார் கைது செய்து வைத்துக் கொண்டு போராட்டத்தை முடிக்குமாறு நெருக்கடி கொடுக்கின்றனர் என்று புகார் கொடுத்தனர்.

நீதிபதி, அந்த புகாரை மற்றொரு நீதிபதி விசாரிக்க இரவோடு இரவாக உத்தரவு பிறப்பித்தார்.

எனவே ஹர்திக் படேலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum