Top posting users this month
No user |
Similar topics
6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்களையும் காணவில்லை: தந்தை பரபரப்பு புகார்
Page 1 of 1

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் தனது 6 வயது மகளின் இரண்டு சிறுநீரகங்களையும் அகற்றி விட்டதாக தந்தை ஒருவர் பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம் பரேலி பகுதியைச் சேர்ந்த பவன்குமாரின் 6 வயது மகள் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
எனவே, பவன்குமார் கடந்தாண்டு சிகிச்சைக்காக மகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுமியைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவரது இடது பக்க சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வலது பக்க சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே பாதிப்படைந்துள்ள சிறுநீரகத்தை நீக்கி விடுவது நல்லது என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் சிறுநீரகம் அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், சிகிச்சை முடிந்த சில தினங்களிலேயே சிறுமி கடுமையான வலியால் அவதிப்பட்டுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டில் சிறுமியின் வயிற்றுப் பகுதியில் சிறுநீரகங்களே இல்லை என கூறப்பட்டுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பவன்குமார், இது தொடர்பாக மருத்துவர்களிடம் விசாரித்த போது, மருத்துவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. பின்னர் பவன்குமார் இது தொடர்பாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் மூத்த மருத்துவ பேராசிரியர் தலைமையில் விசாரணை நடத்த கமிட்டி ஒன்றை எய்ம்ஸ் நிர்வாகம் அமைத்துள்ளது.
இந்த கமிட்டி இந்த வாரத்தில் விசாரணையை இறுதி செய்து அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
மேலும், அரசு மருத்துவமனைகளில் முதன்மையானதாகக் கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்துள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹர்திக் படேலை காணவில்லை! ஆதரவாளர்கள் பரபரப்பு புகார்
» லிந்துலையில் 17 வயது சிறுவனை காணவில்லை
» நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம மரணம்! புகார் கொடுத்த தந்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum