Top posting users this month
No user |
Similar topics
வாய்க்காலை காணவில்லை! விவசாயிகளின் பேனரால் பரபரப்பு
Page 1 of 1

கருர் அருகே காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலை காணவில்லை என விவசாயிகள் பேனர் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றிலிருந்து தென்கரை வாய்க்கால் பிரிந்து செல்லும் இடத்தில், பிள்ளைபாளையம் பாசன வாய்க்கால் பிரிகிறது.
இந்த வாய்க்காலை நம்பி இப்பகுதியில் நெல், வாழை, வெற்றிலைகொடிக்கால் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் பிள்ளைபாளையம் வாய்க்காலை காணவில்லை என்று விவசாயிகள் லாலாப்பேட்டை பகுதியில் பேனர் வைத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மகாதானபுரத்தில் தொடங்கி சிந்தலவாடி வழியாக வரும் இந்த பாசன வாய்க்கால், லாலாப்பேட்டையில் தடம் தெரியாமல் உருமாறி கிடக்கிறது.
வாய்க்காலில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் தூர்வாரியும் தண்ணீர் செல்லாததால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிள்ளபாளையம் வாய்க்காலை தூர்வாரி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பலனில்லை என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது பேனர் வைத்துள்ள விவசாயிகள் சுமார் 5 ஆயிரம் பேராக ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் வாய்க்காலை கண்டுபிடித்து தூர்வாரவும், தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யும்படியும் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியை காணவில்லை: பேனரால் பரபரப்பு
» 6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்களையும் காணவில்லை: தந்தை பரபரப்பு புகார்
» நடிகர் வடிவேலுவை நான்கு வருடங்களுக்கும் மேலாக காணவில்லை: போஸ்டரால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum