Top posting users this month
No user |
Similar topics
ஐ.நா அறிக்கை தொடர்பில் அரைவேக்காடுகளாக வரும் கருத்துக்களைக் கண்டு சஞ்சலம் கொள்ளக் கூடாது: கி.துரைராசசிங்கம்
Page 1 of 1
ஐ.நா அறிக்கை தொடர்பில் அரைவேக்காடுகளாக வரும் கருத்துக்களைக் கண்டு சஞ்சலம் கொள்ளக் கூடாது: கி.துரைராசசிங்கம்
தமிழர்களின் போராட்டம் ஆயுதம் தூக்கினார்கள் என்ற காரணத்திற்காக தீவிரவாதம் பயங்கரவாதம் என்கின்ற வரைவிலக்கணத்திற்குள் தள்ளப்பட முடியாது தமிழர்கள் யாரையும் கொன்று குவிப்பதற்காக யாரையும் அகற்றிவிட்டு நாடு பிடிப்பதற்காக போராடவில்லை ..
..தமிழர்கள் நடாத்திய போராட்டம் ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல எமது நிலங்களை நாங்கள் காப்பாற்றிக் கொள்வதற்காக நடாத்திய தற்காப்புப் போராட்டம் எனவே எந்த வகையிலும் எங்களது போராட்டம் நியாயப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகத்தான் இருக்கின்றது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு படுகொலை 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் அவர் தெரிவிக்கையில்!
போர்கள் செய்வதென்பது மனிதன் நாகரீகம் அடைவதற்கு முன்பிருந்து இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருப்பவை தான் ஆனால் போரில் சம்பந்தப்படாதவர்களை விலக்கி வைக்கக் கூடிய நடவடிக்கைகள் தான் நடைபெற்று வந்திருக்கின்றன.
மன்னர் ஆட்சியிலும் கூட எந்த எந்த இடங்கள் போருக்குரியவை அல்ல எவரெவர் தாக்கப்படக் கூடாது என்று வரையறை செய்து வைத்துள்ளார்கள். நோயாளிகள் குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் ஆகியோர் மீதும், வைத்தியசாலைகள், ஆலயங்கள், நூல் நிலையங்கள், மனித குடியிருப்புக்கள் என்பவையும் போர் நடைபெறுகின்ற போது தவிர்க்கப்பட வேண்டும் என்றெல்லாம் இலக்கியங்களும் சொல்லுகின்றன வரலாறும் சொல்லுகின்றது.
இந்த வரலாறுகளோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொது மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். 1956ல் தலைநகரிலும் கல்லோயாவிலும் எமது தமிழ் மக்கள் அப்பாவித் தனமாகக் கொல்லப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இதனை அடுத்து 1958, 1977, 1979, 1983 ஆகிய காலகட்டத்தில் எல்லாம் வடகிழக்கிற்கு வெளியில் இருந்த தமிழ் மக்கள் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு அவர்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு வட கிழக்கு நோக்கி அனுப்பப்பட்டார்கள்.
சாத்வீகம் என்பது எம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறெல்லாம் மிகக் கொடுமையை எங்கள் மீது திணித்ததன் காரணமாகத்தான் முற்று முழுதாக அகிம்சையில் சாத்வீகத்தில் பழக்கப்பட்டிருந்த தமிழர்கள் நாம் ஆயுதம் ஏந்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.
ஆனால் எமது உயிரைக் காக்கின்ற தற்காப்பு என்பது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அங்கீகரித்த ஒன்றாகவே இருக்கின்றது. எனவே தமிழர்கள் நடாத்திய போராட்டம் என்பது தற்காப்புப் போராட்டம் தான். தமிழர்கள் யாரையும் கொன்று குவிப்பதற்காக யாரையும் அகற்றிவிட்டு நாடு பிடிப்பதற்காக போராடவில்லை தமிழர்கள் நடாத்திய போராட்டம் ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல எமது நிலங்களை நாங்கள் காப்பாற்றிக் கொள்வதற்காக நடாத்திய தற்காப்புப் போராட்டம். எனவே எந்த வகையிலும் எங்களது போராட்டம் நியாயப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகத்தான் இருக்கின்றது.
எனவே தாமிழர்களின் போராட்டம் ஆயுதம் தூக்கினார்கள் என்ற காரணத்திற்காக தீவிரவாதம் பயங்கரவாதம் என்கின்ற வரைவிலக்கணத்திற்குள் தள்ளப்பட முடியாத தற்காப்புப் போராட்டமாகவே இருக்கின்றது.
1990ம் ஆண்டுகளில் எமது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் மிகவும் மூர்க்கத்தனமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அது போன்ற ஒரு நிகழ்வுதான் புதுக்குடியிருப்பிலே நிகழ்ந்தது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் தத்தமது மக்களின் நினைவுகளை அந்த அந்த ஊர் மக்கள் வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு விதமாக நினைவு கூர்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதுதான்.
நாம் 1990ல் இருந்து இன்றுவரை செய்ய வேண்டியவற்றை செய்து கொண்டு தான் வந்திருக்கின்றோம். அது சிலவேளைகளில் பகிரங்கமாகச் செய்ய முடிந்துள்ளது. சில வேளைகளில் மறைமுகமாகச் செய்கின்றோம் ஆனால் மிகவும் ஆத்மார்த்த ரீதியாக நாம் இதனைச் செய்து வந்திருக்கின்றோம்.
இந்த நினைவுகள் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு விதமாகச் செய்யப்பட்டிருந்தாலும் இன்று மிகவும் பகிரங்கமாகச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்கு மிகவும் முக்கிய காரணம் இந்த ஆட்சி மாற்றமாகும்.
எமது உறவுகள் உயிர் நீத்த விடயம் ஒரு பொருள் பொதிந்த விடயமாக இருக்க வேண்டும். எங்களின் வரலாற்றின் பதிவுகளாக இருக்க வேண்டும். வரலாற்றின் அடுத்த சுவடுகளுக்கு வழிகாட்டுகின்றவையாக இருந்திட வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமாகும்.
தற்போது எமது வரலாற்றில் புதிய பக்கங்கள் திருப்பப் பட்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் அமையம்; அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. இந்த அறிக்கை சம்மந்தமாக அறிக்கை வருவதற்கு முன்பு பல்வேறு ஆரூடங்களைப் பலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள் இப்போதும் கூட 30ம் திகதி வரவேண்டிய அறிக்கை பற்றி பல்வேறு விதமாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இடத்தில் தான் தமிழ் மக்கள் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டிய காலமாக இருக்கின்றது.
எம்மைப் பல்வேறு விதத்தில் திசை திருப்பக் கூடிய பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பல கசிவுகள் என்று பலர் சொன்னார்கள் ஆனால் அந்தக் கசிவுகளின் போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் நாமும் நிதானத்தினை இழந்து விடவில்லை. தற்போதும் நிதானத்துடயே இருக்கின்றோம்.
இதில் பொதுமக்கள் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இது தொடர்பில் எமது தலைமை நிதானமாக வெளியிடும் கருத்துக்களை புரிந்து கொண்டு தெளிவு பெற வேண்டுமே தவிர . இது சாதாரண அரசியல் விடயம் அல்ல இது நாம் பரீட்சியப்படாத சர்வதேசத்துடன் நீதித்துரையுடன் சட்ட நியமங்களுடன் ஒட்டியதுமான வித்தியாசமான அரசியல் விடயம் அவ்வாறான விடயத்தை அதிகம் விளங்கிக் கொண்டு பேச வேண்டும்.
நாம் ஒரு சிறிய வட்டத்திற்குள் இருந்து ஒரு விடயத்தைப் பிடிப்பது சிக்கலாக இருக்கும் ஆனால் பெரிய வட்டத்திற்குள் செல்லுகின்ற போது அதற்குள்ளே இவ்வாறான நுணுக்கமான விடயத்தை உறுதிப்படுத்த முடியும். எனவே தான் நாங்கள் இதனைப் போர்க்குற்றம் என்று தொடங்கியுள்ளோம் போர்க்குற்றத்தின் சாட்சியங்கள் எவ்வளவு வலிமையாக இருக்கின்றதோ அது நிச்சயமக இனப்படுகொலை என்ற ரீதயில் கொண்டு செல்லும்.
எனவே மிகவும் நிதானமாக நாம் செல்ல வேண்டும் சொல்ல வேண்டும். நாம் வேறு பக்கத்தில் அடிபட்டுப் போகாமல் மிகவும் நுணுக்கமாக எமது தலைமை சொல்லுகின்ற விடயத்தை கொண்டு செல்ல வேண்டும். எமது தலைமை கைவிட்டு விடும் என்றோ அவர்கள் துரோகம் செய்து விடுவார்கள் என்றோ எண்ணம் எமது மக்களுக்கு ஏற்படாது அவ்வாறு எண்ணியிருந்தால் எமது மக்கள் கடந்த தேர்தலில் எமக்கு ஆணையை வழங்கியிருக்க மாட்டார்கள்.
அந்த விடயங்கள் அவ்வாறு இருக்க நாம் இழந்த உமது உறவுகளுக்கு எல்லாம் சேர்த்து நாம் காண வேண்டிய ஒரு தீர்வு இருக்கின்றது அதுதான் அரசியல் தீர்வு. இந்த அரசியல் தீர்வினை நோக்கி நாம் செல்லுகின்ற போது உம்மை விட்டுச் சென்ற எமது உறவுகளின் ஆத்ம சக்திகள் எம்முடன் இருந்து விரைவில் எமக்கு ஒரு சிறந்த தீர்வினைப் பெற்றுத் தந்திடும் என்று தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இறுதி அறிக்கை வரும் வரைக்கும் நன்னீர் விநியோகிக்க வேண்டும்:த.தே.கூ
» ஐ.நா அறிக்கை தொடர்பில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: அரசாங்கம்
» தமிழர் காணி, மனித உரிமைகள் தொடர்பில் முக்கிய அறிக்கை அமெரிக்காவில் வெளியீடு
» ஐ.நா அறிக்கை தொடர்பில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: அரசாங்கம்
» தமிழர் காணி, மனித உரிமைகள் தொடர்பில் முக்கிய அறிக்கை அமெரிக்காவில் வெளியீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum