Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி மரணம்: தலைவர்கள் இரங்கல்

Go down

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி மரணம்: தலைவர்கள் இரங்கல் Empty குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி மரணம்: தலைவர்கள் இரங்கல்

Post by oviya Tue Aug 18, 2015 3:23 pm

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவியான சவ்ரா முகர்ஜியின் மறைவுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா, கவர்னர் கே.ரோசய்யா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு:

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இதுபோன்ற நேரங்களில் எவ்விதமான ஆறுதல் வார்த்தைகளும் போதுமானதாக இருக்காது.

எனினும், தங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதன் வாயிலாக தங்களது துயரத்தை பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த சோகத்தை தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு வழங்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

தங்களது மனைவியாரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தங்களது மனைவி மறைந்த செய்தியை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

முதல் இணைப்பு:

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி டெல்லியில் இன்று மரணம் அடைந்தார்.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி (58), கடந்த 7-ம் திகதி, உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சுவாசப் பிரச்சனையால் அவதிபட்டு வந்த அவருக்கு அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை மரணம் அடைந்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum