Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அப்துல்கலாம் மறைவுக்கு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல்

Go down

அப்துல்கலாம் மறைவுக்கு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் Empty அப்துல்கலாம் மறைவுக்கு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல்

Post by oviya Tue Jul 28, 2015 1:32 pm

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், இளைஞர்களை வழி நடத்திய சகாப்தம் ஓய்ந்து விட்டது.

மக்களிடம், இளைஞர்களிடம் நெருங்கியிருப்பதையே கலாம் பெரிதும் விரும்புவார்.

எனது எண்ணங்களில் கலாமுடன் பழகி பழைய நினைவுகள் நிறைந்திருக்கிறது. அவருடன் உரையாடும் போது, பல விடங்களை நான் கற்றுக் கொண்டேன்.

மேலும், மிகச் சிறந்த விஞ்ஞானியை, சிறந்த முன்னாள் குடியரசுத் தலைவரை இழந்ததில் இந்த நாடே துக்கத்தில் ஆழ்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், இந்திய விஞ்ஞானிகளுக்கு உத்வேகமாக திகழ்ந்தவர் அப்துல்கலாம்.

ஏழ்மையில் பிறந்து கடின உழைப்பால் முன்னேறியவர்., தமிழம் மக்களின் எண்ணங்களில் மண்ணின் மைந்தராக வாழ்ந்தவர்.

சுதந்திர இந்தியாவின் குறிப்பிடத்தக்க மனிதர்களில் ஒருவர். தம்முடைய கடின உழைப்பு, அறிவால் வியத்தகு இடத்தை எட்டியவர் அப்துல்கலாம்.

இந்தியாவின் விண்வெளி மற்றும் அணுசக்தி திட்டங்களில் மிகப் பெரிய பங்கு வகித்தவர்.

அணுசக்தி ஆற்றலில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்கு மிக முக்கிய காரனமாக இருந்தவர் அப்துல்கலாம். அவரது இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், "பாரத ரத்னா", மேதகு டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு, அவருடன் எனக்கிருந்த தொடர்பு பற்றி அடுக்கடுக்கான எண்ணங்கள் எழுந்தன.

சென்னை - கலைவாணர் அரங்கில் 4-9-2006 அன்று ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் "தொல்காப்பியர் விருது" எனக்கு வழங்கப்பட்ட போது, அந்த விருதை எனக்கு வழங்கியவரே அப்துல் கலாம் அவர்கள்தான்.

அப்போது அவர் ஆற்றிய உரையும், என்னைப் பாராட்டிக்கூறிய வார்த்தைகளும் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவை. ஏன் அதற்கு முன்பே நான் எழுதிய தொல்காப்பியப் பூங்கா நூலினை மேதகு அப்துல் கலாம் அவர்கள் படித்து விட்டு, எனக்குப் பாராட்டுக் கடிதம் ஒன்றும் எழுதியிருந்தார்.

அது பற்றியும் கலைவாணர் அரங்கில் அவர் பேசும்போது குறிப்பிட்டார். குடந்தையில் நடந்த ஒரு தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள் பலர் மாண்டு மடிந்த போது நான் எழுதிய கவிதை ஒன்றையும் கண்களில் கண்ணீர் மல்கப் படித்ததாக எனக்கு எழுதியிருந்தார்.

அப்துல் கலாம் அவர்களைப் பற்றி நான் 13-6-2002 அன்று எழுதிய கவிதையின் ஒருசில வரிகளை இந்த நேரத்தில் நினைவூட்டுவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.

"கடமை தவறா மனிதர் என்று உச்சிக் கலசமாய் உயர்ந்து

மடமை நீங்கி மத நல்லிணக்கம் ஓங்க;

மனித நேயம் நெஞ்சத்தில் தாங்கி - நாட்டின்

மணி விளக்காய் ஒளிவிடப் போகிறார் இன்று!

அணு ஆயுதம் அழிவுக்குப் பயன்படாமல்

அமைதிகாக்கும் கேடயமாய் ஆவதற்கும்

ஆகாயத்தில் தாவுகின்ற ஏவுகணை

அண்டைநாட்டுத் தூதராக மாறுதற்கும்

மறு பிறப்பை விஞ்ஞானம் எடுப்பதற்கு

மனவலிவு புவி மாந்தர்க்கு மிகவும் வேண்டும்.

அவ்வலிவை உருவாக்க ஏற்றவரே

அறிவியலை ஆக்கப் பணிக்கென நோற்றவரே

அப்துல் கலாமென ஆரவாரம் புரிந்து

அவனியெங்கும் அன்பு முழக்கம் ஒலிக்கும். "

இத்தகைய உயர்வுக்கும் புகழுக்கும் உரிய அப்துல் கலாம் அவர்களை இந்தியத் திருநாடே இழந்து நிற்கும் இந்த வேளையில், அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரைப் பெரிதும் நேசிக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நேர்மை, எளிமை, அறிவுகூர்மை மிகுந்த இணையற்ற மனிதராக திகழ்ந்தவர் டாக்டர் அப்துல்கலாம். ஒரு தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானி.

"எதையும் சாதிக்கும் திறமை இந்தியாவிற்கு இருக்கிறது" என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தி, நம் நாட்டிற்கு உலக அரங்கில் மரியாதையும், பெருமையையும் தேடித் தந்தவர்.

தான் மட்டும் கனவு காணாமல் இந்த நாட்டின் இளைய தலைமுறையையும் "கனவு காணுங்கள். சாதிக்க முடியாதது எதுவும் இல்லை" என்று உணர்வுகளை தட்டி எழுப்பியிருக்கிறார்.

இன்றைய தினம் அவர் நம்மிடம் இல்லை. அவரது மறைவு நமக்கு எல்லாம் பேரிழப்பு.

எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் இந்தியாவை தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று பாடுபட்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றி, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் காண்போம் என்று இந்த நேரத்தில் உறுதியேற்றுக் கொள்வோம் என கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கடல் அலைகள் தாலாட்டும் இராமேஸ்வரத்தில் எளிய இஸ்லாமிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, அறிவியல் மேதையாக அவனியில் பேர் பெற்று, கோடானு கோடி மக்களின் ஏக்கக் கனவுகளை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக குடியரசுத் தலைவர் பதவி நாற்காலியில் அமர்ந்து, வளரும் இளம் தலைமுறையினர் விண்முட்டும் சாதனைகளைப் படைக்க வழிகாட்டிய அக்கினிச் சிறகுகளை தந்து ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த ஏந்தல் அப்துல் கலாம் மறைந்துவிட்டார்! தமிழர்களுக்கு புகழ் தந்த இதயத் துடிப்பு அடங்கிவிட்டது!

கிரேக்க தேசத்தின் நாடாளுமன்றத்தில் அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய உரை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

அந்த உரையில்தான், சங்கத்தமிழினுடைய உன்னதத்தை, பழந்தமிழர் நாகரிகத்தை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழரின் கோட்பாட்டை எடுத்துரைத்தார்.

தமிழ் இனத்துக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் உலகளாவிய பெருமை சேர்த்தார் அப்பெருமகனார்.

ஈழத் தமிழர் இனக்கொலை செய்த கொடியவன் ராஜபக்சே 2014 இல் இந்தியப் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் மாளிகை அசோகா அரங்கத்தில் நுழைந்தபோது, முன்வரிசையில் அமர்ந்திருந்த அனைவரும் அந்த மாபாவியின் கரம் குலுக்கி வரவேற்றபோது, அதே வரிசையில் அமர்ந்திருந்த அப்துல் கலாம் அவர்கள் எந்த அசைவும் காட்டாமல் அவனை அலட்சியப்படுத்தி தமிழரின் தன்மானத்தை நிலைநாட்டிய உத்தமரன்றோ!

உயிர் ஓய்ந்து உடலால் அவர் மறைந்தாலும் இந்த மண்ணும், கடலும், வானும் இருக்கும்வரை அவரது புகழும் நிலைத்திருக்கும்.

தமிழகம் உலகத்துக்குத் தந்த தவப்புதல்வனை இழந்து துயரத்தில் துடி துடிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை. அவரது இழப்பு, கலாமின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பாகும். அவரது இறுதிசடங்கு தமிழகத்திலேயே நடத்தவேண்டும்.

இதனை தமிழக மக்களின் சார்பாக மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், டாக்டர் அப்துல்காலாம் எப்போது இந்திய குடியரசுத்தலைவரானாரோ அப்போதுதான் இந்திய மக்களுக்கு நம்பிக்கை என்ற ஒரு வார்த்தைக்கு புதிய அர்த்தம் கிடைத்தது.

இன்று நாம் அவரை இழந்து தவிக்கிறோம். அவரது இழப்பு பேரிழப்பு. வானத்தில் இருந்து அவர் நம்மை வழிநடத்துவார் என கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum