Top posting users this month
No user |
Similar topics
திரைப்பட தயாரிப்பாளரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை: பரபரப்பு சம்பவம்
Page 1 of 1

சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரிடம் துப்பாக்கி முனையில் அவரது உதவியாளரே கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை வளசரவாக்கம், வெங்கடேஸ்வரா நகர், 2-வது தெருவைச் சேர்ந்த தஞ்சை கே.சரவணன் ஒரு புதுமுக சினிமா தயாரிப்பாளர் மற்றும் புதுமுக இயக்குனர்.
இவர் நேற்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், நான் ரியல்எஸ்டேட் தொழில் செய்கிறேன். மேற்கண்ட முகவரியில் மேல்மாடியில் நான் வசிக்கிறேன். அதே முகவரியில் எனது அலுவலகமும் உள்ளது.
தற்போது ஜமுனா பிலிம் இன்டர்நேஷனல் என்ற பெயரில் புதிதாக பட நிறுவனம் தொடங்கி உள்ளேன்.
என்னிடம் கடந்த 8 மாதங்களாக உதவியாளராக வேலை பார்த்த சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த பிரபாகர் என்பவருக்கு ர்மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்து வந்தேன்.
யூன் 1ம் திகதி, காலை 7.30 மணிக்கு நான் எனது அலுவலகத்தில் தூங்கிக்கொண்டு இருந்த போது கதவு தட்டப்பட்டது.
கதவை திறந்தபோது எனது உதவியாளர் பிரபாகர் நின்று கொண்டிருந்தார்.
அவர் அலுவலகத்திற்குள் நுழைந்ததை அடுத்து, அவருக்கு பின்னால் 5 பேர் கையில் பட்டா கத்தி மற்றும் துப்பாக்கியுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
கத்தியை எனது கழுத்தில் வைத்து, துப்பாக்கியை நெற்றிப்பொட்டில் வைத்துக்கொண்டு சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று பயமுறுத்தினர்.
நான் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் சுமார் 40 சவரன் நகைகளை கொள்ளை அடித்தனர்.
என்னை பிற்பகல் 3 மணிவரை கத்தி மற்றும் துப்பாக்கி முனையில் அறையில் உட்கார வைத்து விட்டனர்.
என்னிடம் இருந்த ரூ.1 லட்சம் வங்கி காசோலையையும் எடுத்துக்கொண்ட பிரபாகர் ரூ.1 லட்சம் காசோலையை வங்கியில் போட்டு பணத்தையும் எடுத்துவிட்டார்.
பொலிசிடம் புகார் அளித்தால் தஞ்சையில் வசிக்கும் எனது குடும்பத்தை தீர்த்துக்கட்டி விடுவோம், என்று மிரட்டி விட்டு தப்பிச்சென்றனர்.
எனது உதவியாளர் பிரபாகர் தான் கொள்ளையர்களை அழைத்து வந்துள்ளார்.
என்னிடம் பணம்-நகைகள் இருப்பதை தெரிந்து கொண்டு, அவரது கொள்ளைக்கார நண்பர்களுடன் வந்து இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளார்.
நடந்த சம்பவம் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் கொடுத்த புகார் மனு, தியாகராயநகர் துணை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» துப்பாக்கி முனையில் சிறுமி பலாத்காரம்: வாட்ஸ்அப்பில் வீடியோவை அனுப்பிய வாலிபர்கள் கைது
» செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 5 தமிழர்கள்: துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு
» ஒபாமாவை வேவுபார்த்த மர்ம விமானம்: குடியரசு தினத்தில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம் அம்பலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum