Top posting users this month
No user |
Similar topics
ஆசிரியையிடம் ஆபாசமாக பேசி தாலியை பறித்த பொலிஸ்! பரபரப்பு சம்பவம்
Page 1 of 1

ராமநாதபுரத்தில் விசாரணைக்கு வந்த ஆசிரியையிடம் அடாவடியாக பேசி தாலியை பறித்த பொலிசின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்தவர் லாவண்யா (23). இவர் அங்குள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பாண்டி சரவணக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
அதன் பின்னர் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
திருமணத்தின் போது லாவண்யாவுக்கு 25 பவுன் நகை மற்றும் மாப்பிள்ளைக்கு ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
அவற்றைத் திரும்ப பெற்றுத் தரக் கோரி லாவண்யா, கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. மயில்வாகணனிடம் புகார் மனு கொடுத்தார்.
அவரது உத்தரவின் பேரில், திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள், லாவண்யாவையும், அவரது கணவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினார்.
அப்போது ஆசிரியை லாவண்யா அணிந்திருந்த தாலிச் சங்கிலியை கழற்றி கொடுக்குமாறு எஸ்.ஐ. வேலம்மாள் கேட்டு முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளார். .
மேலும் தாலியை தரமறுத்த லாவண்யாவை, வேலம்மாள் தரக்குறைவாக பேசி தாலிச் சங்கிலி மற்றும் மோதிரத்தை பறித்துக்கொண்டார்.
இதுகுறித்து லாவண்யா, ராமநாதபுரம் கூடுதல் எஸ்பி வெள்ளத்துரையிடம் புகார் செய்தார்.
அவரது உத்தரவின்பேரில், திருவாடானை போலீஸ் டி.எஸ்.பி. சேகர் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார்.
விசாரணையில், பெண் எஸ்.ஐ.வேலம்மாள் லாவண்யாவின் தாலி செயினை பறித்துக்கொண்டதும், தரக்குறைவாக பேசியதும் உண்மைதான் என்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து வேலம்மாள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை, எஸ்.பி. மயில்வாகணனுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதற்கிடையே வேலம்மாள் பலமுறை இதுபோல முரட்டுத்தனாக நடந்து சர்ச்சையில் சிக்கியவர் என கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லஞ்சத்தை வாங்கி பேன்ட் பாக்கெட்டில் திணித்து கொண்ட பலே பெண் பொலிஸ்: வீடியோவால் பரபரப்பு
» திரைப்பட தயாரிப்பாளரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை: பரபரப்பு சம்பவம்
» செம்மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளியாக மாறிய பொலிஸ் டி.எஸ்.பி.: பரபரப்பு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum