Top posting users this month
No user |
Similar topics
'டாப் 10 குற்றவாளிகள்' பட்டியலில் பிரதமர் மோடியின் படம்: கூகுளால் வெடித்த சர்ச்சை
Page 1 of 1

கூகுளில் 'டாப் 10 குற்றவாளிகள்' என்று ஆங்கிலத்தில் தேடினால் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் தேடியந்திர தளத்தின் புகைப்படப் பிரிவில் Top 10 criminals என்று தேடினால் அந்தத் தேடல் முடிவில் முதல் 20 நபர்களின் படங்களில் மூன்றில் பிரதமர் மோடி இடம் பெற்றிருக்கிறார்.
இந்த விவகாரம், டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டது.
இந்த விடயம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து கூகுள் நிறுவனம் தற்போது மன்னிப்பு கோரியுள்ளது.
கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த தேடல் முடிவுகள் எங்களை மிகவும் பாதித்துள்ளது.
இது எந்த வகையிலும் எங்கள் நிறுவனத்தின் கருத்து அல்ல. சில நேரங்களில் இதுபோன்ற குறிப்பிட்ட கேள்விகளுக்கான தேடலின் முடிவில் இத்தகைய வியப்புக்குரிய பதில்கள் கிடைக்கும்.
'டாப் 10 கிரிமினல்கள்' என்ற தேடலில், பிரதமர் மோடியின் படங்கள் இடம்பெற்று ஏற்படுத்திய குழப்பங்கள், தவறான புரிதல்களுக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்.
இது மாதிரியான எதிர்பாராத முடிவுகள் வருவதை தடுக்க நாங்கள் எங்கள் அல்காரிதம்களை மேம்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறோம்.
அந்த தேடலுக்கு விடையாக மோடியின் படம் கிடைக்கக் காரணம், பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று மோடியின் புகைப்படத்தையும் தவறான மெட்டா-டேட்டாவையும் பயன்படுத்தியதே ஆகும்.
இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட செய்தித்தாள் எந்த வகையிலும் மோடியை கிரிமினல் நடவடிக்கைகளுடன் இணைந்து செய்தி வெளியிடவில்லை.
மோடி, கிரிமினல் நடவடிக்கை என்ற வார்த்தைகள் அருகருகே இடம் பெற்றதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, Top 10 criminals தேடல் முடிவுக்கு மேலே ஒரு சிறு குறிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது.
அதில், இந்தத் தேடல் முடிவுகள் அனைத்தும் கூகுளின் கருத்து அல்லது நம்பிக்கை சார்ந்தது அல்ல என்றும், தங்களது அல்காரிதம் அடிப்படையில் இவ்வாறான தேடல் முடிவுகள் காணக் கிடைக்கின்றன என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் மோடியின் வீட்டின் அருகே வெடித்த துப்பாக்கி: நடந்தது என்ன?
» பிரதமர் மோடியுடன் பிரேக் - அப்! மோடியின் தீவிர ஆதரவாளர் அதிரடி அறிவிப்பு
» பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு? அதிர்ச்சியடையாமல் படிக்கவும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum