Top posting users this month
No user |
Similar topics
கொட்டும் மழையிலும் சுனாமியின் பத்தாண்டு நிகழ்வில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி- கவனிப்பாரற்று கிடக்கும் நாவலடி மக்கள்
Page 1 of 1

2004ஆம் ஆண்டு மார்கழி மாதம் 26ஆம் திகதியன்று இந்த நாட்டையே ஒரு கனம் உழுக்கிய சம்பவமானது பத்து வருடங்கள் கழிந்தும் இன்னும் உறவுகளின் நெஞ்சங்களில் இருந்து மாறவில்லை என்பதற்கு இன்று கொட்டும் மழையிலும் இறந்த உறவுகளுக்காக வேண்டி அஞ்சலி செலுத்தப்பட்டதில் இருந்து அறியமுடிகின்றது
இன்றுடன் பத்து வருடங்கள் சுனாமி என்ற கொடிய அரக்கனினால் கல்முனை மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்திலே அறநெறி கற்பதற்காக சென்றிருந்த சிறு பிஞ்சுகளையும் அவர்களை கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர்களையும் தங்களது வீடுகளில் இருந்தவர்களையும் எந்த ஈவிரக்கமும் இன்றி சுனாமி அலை அடித்துக்கொண்டு சென்றது.
இன்றும் கனவாக இருக்கின்றது என இறந்த உறவுளை நினைத்து நினைவு கூறுவதனையும் காணமுடிகின்றது. நாட்டில் பல பாகங்களிலும் சுனாமியின் தாக்கம் காணப்பட்டபோதும் அதிகளவு தாக்கத்திற்கு உள்ளான பிரதேசமாக கல்முனை பிரதேசம் இருந்தது.
இங்குமாத்திரம் 598 பேர் சுனாமி அலையில் சிக்குண்டு இறந்திருக்கின்றார்கள் அவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து இந்த இடத்திலே தூபி கட்டி வருடாவருடம் அஞ்சலியும் செலுத்தப்பட்டு வருகின்றது.
பூவை சரவணன் அவர்களால் வெளியிடப்பட்ட கண்ணீர் கடல் பத்து எனும் நூல் பிரதியினை தனது மனைவியையும் மகனையும் சுனாமியால் இழந்த ராஜதுரைக்கு வழங்கி வைப்பதனையும் படத்தில் காணலாம்.
கவனிப்பாரற்று கிடக்கும் நாவலடி மக்கள்
நாவலடி மக்களை கோரத் தாண்டவமாடிய சுனாமியின் ஒரு தசாப்தம் முடிவடைந்த நிலையிலும் சுனாமியின் பாதிப்புக்குள்ளான இடங்கள் இன்றுவரைக்கும் அதே நிலையில் தான் இருக்கின்றது.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமான மட்டக்களப்பு நாவலடி கிராமமானது ஒரு புறம் கடலும், மறுபுறம் வாவியாலும் சூழப் பெற்ற ஒரு அழகிய கிராமம் என்று அனைவராலும் கவரபபட்ட கிராமமாக சுனாமிக்கு முன் திகழ்ந்தது.
துள்ளி விளையாடிய சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் ஒரு நொடி கணப் பொழுதில் கழுவிய கடல் தாயை நம்பியே இம் மக்கள் கடலுக்கும் வாவிக்கும் நடுவில் வாழ்ந்து வந்தார்கள்.
அது மட்டுமின்றி இலங்கையின் முக்கிய தொழிலான மீன் பிடித் தொழிலையே மிகவும் கஷ்டத்தின் மத்தியில் மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை இட்டுச் செல்கின்றனர். மேலும் இம் மீனவ மக்களுக்கு எதுவித அரச உதவிகளும் இதுவரை கிடையாமல் இருப்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.
இன்று பத்து வருடங்கள் கடந்தும் அந்த மக்களின் பொருளாதாரம் இன்றுவரைக்கும் எவராலும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பது அவர்களின் பாரிய பிரச்சனையாக உள்ளது. சுனாமிக்கு முன்னைய காலகட்டங்களில் இவ் கிராமத்தில் உள்ள பாடசாலையில் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் சிறந்த கல்வியை பெற்று வந்தனர் தற்போது இவ் கிராமத்தில் பாடசாலையை மீளவும் நடைமுறைப்படுத்துவதற்கு இயலாத நிலையில் உள்ளனர்.
தங்களது பாடசாலையை மீள செயற்படுத்துவதற்கு இன்றுவரை எந்த விதமான உதவிகளும் அற்றவர்களாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். இலங்கையில் அதிக உயிர்களை காவு கொண்ட இடமாக நாவலடி திகழ்ந்தது அது மட்டும் அன்றி அன்னை பூவதியின் சமாதியும் அங்குதான் இருக்கின்றது.
இவ்வாறான துயரத்துக்கு மத்தியிலும் சிங்கள பேரினவாத்தின் இராணுவ குடியேற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர் . கடந்த ஆண்டு இயற்கையின் சீற்றம் அதிகரித்தமையால் கிழக்கின் பல பாகங்களிலும் வெள்ள அனர்த்தம் ஏற்ப்பட்ட போது வெள்ளத்தை கடலுக்கு அனுப்புவதற்காக முன்னாள் முதலமைசர் சந்திரகாந்தனினால் இந்த கிராமம் இரண்டாக பிரிக்கப்பட்டது.
கல்லடி புது முகத்துவரத்துக்கும் நாவலடிக்கும் இடையில் நடுவே வெள்ள நீரை போக்குவதற்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி செய்த இந்த வேலை காரணமாக இன்று வரைக்கும் அந்த மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகவே உள்ளது.
இன்று அந்த மக்கள் தங்களது சொந்த கிராமத்தில் உள்ள பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கு கூட முடியாத நிலையில் உள்ளனர் என்பது அங்குள்ள பணம் படைத்த அரசியல்வாதிகளுக்கு தெரியாது என்பது அம்மக்களின் குறையாக உள்ளது.
இன்றைய நாளில் கூட நாவலடி கிராம மக்கள் தங்களது உயிர் உடைமை அனைத்தையும் இழந்து கூட தங்களது சொந்த மண்ணில் நிம்மதியாக வாழுவதற்கு முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
கிழக்கில் உள்ள மாஜா ஜால அரசியல்வாதிகளே இவர்களையும் சற்று பாருங்கள் நீங்கள் அனுபவிக்கும் சுக போக வாழ்க்கை இம் மக்களின் பணமாகவும் இருக்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சபரிமலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் கூட்டம்
» கலாமைப் போலவே தோற்றமளிக்கும் ”உடுமலை கலாம்”: மக்கள் ஜனாதிபதிக்கு அஞ்சலி
» உயிர் பாதுகாப்பு கோரி மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum