Top posting users this month
No user |
Similar topics
சபரிமலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் கூட்டம்
Page 1 of 1

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.
திருவிழா தொடங்கிய நாள் முதல் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த 2 நாட்களாக 18–ம் படி ஏற பக்தர்கள் 14 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது கேரளாவில் பெய்து வரும் மழை சபரிமலையிலும் கொட்டியது. இதனால் பெரு வழிப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் அவதிக்கு ஆளானார்கள்.
மழை கொட்டியபோதும், கோவிலில் கூட்டம் குறையவில்லை. இதனால் நடை திறக்கப்பட்டு 22 நாட்களில் கோவிலின் மொத்த வருமானம் ரூ.77 கோடியை தாண்டியது.
நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவ தால் கோவில் நிர்வாகம் ஆன்லைன் முறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தது.
அதன்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கை 12.5 லட்சத்தை தாண்டியது. அவர்களில் இதுவரை கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தவர்கள் 4.5 லட்சம் பேர் ஆவர்.
ஒவ்வொரு நாளும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்கிறார்கள். இப்படி முன்பதிவு செய்தவர்கள் சரியான நேரத்தில் சன்னிதானம் வந்து ஆன்லைன் கூப்பன்களை வழங்கி வரிசையில் நிற்க வேண்டும் என கேரள மாநில தென்மண்டல ஏ.டி. ஜி.பி.யும், சபரிமலை கோவில் தலைமை பாதுகாப்பு அதிகாரியுமான பத்மகுமார் தெரிவித்தார்.
சபரிமலையில் நேற்று அய்யப்பனுக்கு அஷ்டாபிஷேகம் நடந்தது. பால், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், நெய், தேன், பஞ்சாமிர்தம் கொண்டு அய்யப்பனுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
சபரிமலை அய்யப்பனுக்கு கானகவாசன் என்றொரு பெயரும் உண்டு. இதற்கு காட்டில் வாழும் மக்களின் பாதுகாவலன் என பொருள். இதற்கேற்ப அய்யப்பனை ஆண்டுதோறும் ஆதிவாசி மக்கள் திரண்டு சென்று தரிசனம் செய்வார்கள்.
நேற்று சன்னிதானத்தில் ஏராளமான ஆதிவாசி மக்கள் அவர்களின் தலைவர்கள் தலைமையில், சன்னி தானம் சென்று 18–ம் படி ஏறி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் அய்யப்பனுக்கு காட்டுப் பழங்கள், காட்டுத் தேன், முந்திரி பழம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தினர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 22 நாளில் ரூ.77 கோடி வருமானம்
» மகிந்தவுக்காக மாத்தறை வந்த கூட்டம் திருடர் கூட்டம்!– மங்கள சமரவீர
» ஒவ்வொரு மழையிலும்....
» மகிந்தவுக்காக மாத்தறை வந்த கூட்டம் திருடர் கூட்டம்!– மங்கள சமரவீர
» ஒவ்வொரு மழையிலும்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum