Top posting users this month
No user |
சபரிமலையில் 27–ந்தேதி மண்டல பூஜை
Page 1 of 1
சபரிமலையில் 27–ந்தேதி மண்டல பூஜை
திருவனந்தபுரம், டிச. 23–
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16–ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.
பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை வருகிற 27–ந்தேதி பகல் நடைபெறுகிறது. மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் அய்யப்பப் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 10 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்துதான் பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய முடிகிறது.
மண்டல பூஜையின்போது சுவாமி அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். தங்க அங்கியில் ஜொலிக்கும் சுவாமி அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் திரள்வார்கள்.
மண்டல பூஜையை யொட்டி சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் பத்தினம் திட்டா மாவட்டம் ஆரன் முளை பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கார ரதத்தில் இன்று காலை புறப்பட்டது. முன்னதாக பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இன்று இரவு ஓமல்லூர் ரத்த கண்ட சாமி கோவிலை அடையும் ஊர்வலம் நாளை 24–ந்தேதி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு 26–ந்தேதி பகல் பம்பை கணபதி கோவிலை சென்றடையும். அங்கிருந்து தங்க அங்கிகளை பக்தர்கள் மேள தாளம் முழங்க தலை சுமையாக சபரிமலைக்கு எடுத்துச் செல்வார்கள். அந்த தங்க அங்கிக்கு தேவசம் போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்படும். அன்று மாலை 6 மணிக்கு சுவாமி அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
மறுநாள் 27–ந்தேதி பகல் 12 மணிக்கு நடைபெறும் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜையின்போது தங்க அங்கியில் ஜொலிக்கும் சுவாமி அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் 30–ந்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.
சபரிமலை கோவிலில் பக்தர்கள் ஏறி செல்லும் 18–ம் படிக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சலோக தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது சில இடங்களில் தகடுகள் பெயர்ந்துள்ளன.
இதனால் 18–ம் படியை சீரமைக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. சபரிமலை சீசன் முடிந்த பிறகு இந்த பணிகள் தொடங்கும். மேலும் பஞ்ச புண்ணியாக சுத்தி பூஜை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum