Top posting users this month
No user |
Similar topics
உயிர் பாதுகாப்பு கோரி மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
Page 1 of 1

தம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் கற்குவாரியினால் ஏற்படும் அனர்த்தத்தில் தொழிலாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு கோரி 500ற்கும் மேற்பட்ட அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் இன்று கொட்டும் மழையிலும் ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறிப்பாக மேபீல்ட், சாமஸ், ஆகீல், பிட்டவின் ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் வீதியை மறித்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மேபீல்ட் தோட்டத்திற்கு சொந்தமான இந்த கற்குவாரி 2009 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இதில் வெடிகள் வைக்கப்பட்டு பாறைகள் தகர்க்கப்படுவதனால்
தாங்கள் பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்குவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நில அளவை திணைக்களம் மற்றும் பொறியிலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் ஆகியோர்களால் மேற்படி இடத்தினை பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டு இவ்விடம் இயற்கை அனர்த்தத்தை எதிர்காலத்தில் உள்வாங்க கூடிய பகுதியாக அமையலாம். ஆனால் தற்பொழுது இந்த இடத்தில் அனர்த்தங்கள் எதுவும் இடம்பெறாது என உத்தரவாதம் அளிக்கப்பட்டு கற்குவாரி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த
கூற்றுக்கு மறுபுறமாக இப்பொழுது பாரிய இழப்புகளை எதிர்கொள்ள கூடிய நிலையில் தோட்ட தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
உதாரணமாக கற்குவாரியினுள் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக மலைகள் சரிவடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கற்குவாரியில் வெடி வைத்து கற்பாறைகள் தகர்க்கப்படும் போது கற்கள் சிதறி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தோட்ட உதவி கண்காணிப்பாளரின் இல்லம் மற்றும் தவறனை, மேபீல்ட் சாமஸ் தோட்ட லயக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் விழுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் குறித்த இந்த தோட்ட உதவி கண்காணிப்பாளரின் இல்லத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள தவறனையும் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதோடு, அங்கு பணியாற்றும் ஊழியர்களையும் தற்காலிகமாக பணியில் ஈடுபட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் குறித்த கற்குவாரியின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறு தோட்ட உதவி கண்காணிப்பாளர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை கருத்திற் கொண்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை குறித்த கற்குவாரிக்கான அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் ஆய்வுகளை முன்னெடுத்த மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் கற்குவாரியின் செயற்பாடுகளால் ஆபத்து இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
பல்வேறு ஆபத்துகளை தடுக்கும் வகையில், கற்குவாரியின் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறுயிருக்க மேற்படி தோட்டத்தில் தோட்ட உதவி கண்காணிப்பாளரின் பங்களா குடியிருப்புக்கும் மேலும் அதன் அருகில் இருக்கும் தவறனைக்கும் பாதிப்பு ஏற்படுமே தவிர தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என எங்களிடம் தோட்ட அதிகாரி தெரிவித்ததாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்திற்கொணடு இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர். அத்தோடு தற்காலிகமாக இரத்து செய்துள்ள இந்த கற்குவாரியின் அனுமதி பத்திரத்தை முழுமையாக இரத்து செய்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 1 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சில மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் பின் திம்புள்ள பத்தனை மற்றும் ஹற்றன் பொலிஸாரின் தலையீட்டின் பின் ஆர்ப்பாட்காரர்கள் கலைந்து சென்றனர்.
ஏற்படும் இந்த அனர்த்தம் தொடர்பாக நாளை குறித்த தோட்ட தலைவர்களிடம் தோட்ட அதிகாரியும், பொறியியலாளர்களும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வீதியை புனரமைத்து தருமாறு கோரி வட்டவளை மக்கள் ஆர்ப்பாட்டம்!
» மதுபான சாலையை மூடுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்: இ.தொ.காவும் ஆர்ப்பாட்டத்தில் சங்கமம்
» வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கோரி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum