Top posting users this month
No user |
Similar topics
வீதியை புனரமைத்து தருமாறு கோரி வட்டவளை மக்கள் ஆர்ப்பாட்டம்!
Page 1 of 1

வட்டவளை நகரத்திலிருந்து 6 கிலோமீற்றர் தூரம் கொண்ட பாதை செப்பனிடப்படாமல் சுமார் 5 வருடங்களாக இழுபறியான நிலையில் உள்ளதனால் அப்பிரதேச மக்கள் இணைந்து வீதி மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நோட்டன் மற்றும் வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அகரவத்தை, மீனாட்சி, கிளார்மெண்ட், லொனக், சமன்புர கிராமம் போன்ற தோட்டங்களுக்கு செல்லும் இப்பாதை குன்றும் குழியுமாக மோசமான நிலையில் காணப்படுகின்றன.
400 குடும்பங்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் பல்வேறு தேவைகளுக்காக இவ்வீதியை நாளாந்தம் பயன்படுத்துகின்றனர். இந்த பிரதான வீதி சேதமடைந்து இருப்பதனால் அதனை புனரமைத்து தருமாறு கோரி இன்று காலை இத்தோட்ட மக்கள் ஹற்றன் கொழும்பு பிரதான வீதி மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் பல மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. பாதை மிகவும் மோசமாக இருப்பதால், வாகன உரிமையாளர்கள் இரவு நேரங்களில் மிக கஷ்டத்திற்கும் மத்தியில் பயணம் செய்கின்றனர்.
அதேவேளை நோயாளர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக வட்டவளை போன்ற வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படும் போது, நோயாளர்கள் உட்பட வாகன சாரதிகளும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இவ்வீதியை காலம் தாழ்த்தாமல் மிக விரைவில் புனரமைத்து தர அரசியல்வாதிகள் முன்வரவேண்டும் என இத்தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்ததோடு, கினிகத்தேனை பிரதேச செயலாளருக்கு இவ்வீதியை புனரமைத்து தருமாறு கோரி மகஜர் ஒன்றும் வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மக்களால் கையளிக்கப்பட்டுள்ளது. அதன் பின் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உயிர் பாதுகாப்பு கோரி மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
» ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு கோரி நோர்வூட் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்
» பாதை திருத்தி தருமாறு கோரி தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum