Top posting users this month
No user |
விடுதலையை நேசிக்கும் மக்கள் தொண்டன் மதியரசன்: மறைந்த பிரதேச சபை உறுப்பினருக்கு சிறீதரன் எம்பி அஞ்சலி
Page 1 of 1

யாழ்ப்பாணம் கரவெட்டி தெற்கு, மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய உறுப்பினர் ஆழ்வார்ப்பிள்ளை மதியரசன் இன்று நோய் காரணமான காலமாகியுள்ளார். இவருக்கு கட்சியின் நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் தமது வணக்கத்தை தெரிவித்துள்ளார்.
இவரின் மறைவு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் விடுத்துள்ள அஞ்சலிக் குறிப்பில்,
மறைந்த கரவெட்டி தெற்கு, மேற்கு பிரதேசபை உறுப்பினர் ஆழ்வார்ப்பிள்ளை மதியரசன் தீவிரமான விடுதலை நேசி. எப்பொழுதும் தன் தலைவர் பிரபாகரன் என சொல்லிக்கொள்ளும் கொள்கைப் பற்றாளன்.
ஆழ்ந்த கொள்ளை பற்றினுடாகவே அவர் இந்த அரசியல் பணிக்கு வந்தார். அந்த அனுபவம் அவரின் பேச்சிலும் செயலிலும் தென்பட்டது.
இக்கட்டான நெருக்கடியான சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஒரு வேட்பாளனாக களமிறங்கி 2011ம் ஆண்டு வென்று மக்கள் பணியை இறுதிவரை செவ்வனே செய்த பண்பும் பாசமும் உடைய ஒரு மனிதர் மதியரசன்.
மதியரசனின் மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, பிரதேச சபை, கட்சி என்பவற்றுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.
மக்கள் பணியோடு தன் குடும்பத்தையும் நல்ல கல்விபுலத்தோட வழிநடத்திச் சென்றிருக்கும் பொறுப்புணர்வுள்ளவர்.
இன்றைக்கும் இவரது மகன் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையிருக்கும் நிலையில்தான் இவரது இழப்பும் நிகழ்ந்திருக்கின்றது. தான் பிறந்த ஊருக்கும் மண்ணுக்கும் விசுவாசம்மிக்க ஒரு வாழ்வை வாழ்ந்து இடைநடுவில் செல்வதாகவே அவரது வயது சொல்கின்றது.
இன்னும் வாழவேண்டிய காலங்கள் இருந்தபோதும் இயற்கை மதியரசனை அழைத்துச்செல்கின்றது.
கடந்த நவம்பர் மாதம் பிரதேச சபையின் கூட்டத்தின்போது மாவீரர்களுக்கு மலர்தூவி விளக்கேற்றி மதியரசன் வணக்கம் செலுத்தியது ஊடகங்களில் வெளிவந்ததையும் இங்கே நினைத்துப் பார்த்து, இதுவரை எமது தமிழ் தேசியத்துக்காக இரவுபகல்பாராது அவர் செய்த பணிக்கு நாம் தலைசாய்க்கின்றோம்.
அவரது கனவுகள் மெய்ப்பட அனைவரும் பணிசெய்வது அவரது ஆன்மாவுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக அமையும். எமது மக்கள் சார்பில் மறைந்த மதியரசனுக்கு எமது வணக்கங்கள்.
என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum