Top posting users this month
No user |
Similar topics
42 ஆண்டுகளாக கோமா: கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட நர்ஸ் அருணா காலமானார்
Page 1 of 1

மும்பை மருத்துவமனையில் 42 வருடத்திற்கு முன்பு வார்டு பாய் ஒருவரால் கற்பழிக்கப்பட்டு கோமாவில் இருந்த நர்ஸ் அருணா ஷான்பாக் இன்று காலமானார்.
கடந்த 1973ம் ஆண்டு, நவம்பர் 27ம் திகதியன்று மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருந்த போது, வார்டு பாய் ஒருவரால் கற்பழிக்கப்பட்ட நர்ஸ் அருணா கடுமையாக தாக்கப்பட்டார். இதனால் அவரது மூளை செயலிழந்தது.
இதையடுத்து அவர் மும்பை கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அருணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவருக்கு நினைவு திரும்பவில்லை.
இந்நிலையில் இவரது நிலையை கண்டு எழுத்தாளர் பிங்கி விரானி, கடந்த 2011ம் ஆண்டு அருணாவை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் கருணை கொலை செய்ய மருத்துவமனை ஊழியர்களும், நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவித்ததால் உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.
இந்நிலையில் 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அருணாவின் உடல்நிலை திடீரென மோசமானது. ஆனால் தீவிர சிகிச்சையால் சிறிது நாளில் அவரது உடல்நிலை மீண்டும் தேறியது. அவரை மருத்துவமனை நிர்வாகிகளும், ஊழியர்களும் சிறப்பாக கவனித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. மருத்துவர்கள் அருணாவுக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்தார்.
கிட்டத்தட்ட 42 ஆண்டுகாலம் கோமாவில் இருந்த அருணாவுக்கு நினைவு திரும்பாமலேயே இன்று அவரது உயிர் பிரிந்து விட்டது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குழந்தை இறந்த துக்கம்: பிரசவம் பார்த்த நர்ஸ் முகத்தில் ஆசிட் வீசிய தந்தை
» 10 ஆண்டுகளாக இருட்டில் கிடந்த சகோதரிகளின் பரிதாப வாழ்க்கை
» ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum