Top posting users this month
No user |
10 ஆண்டுகளாக இருட்டில் கிடந்த சகோதரிகளின் பரிதாப வாழ்க்கை
Page 1 of 1

கர்நாடகாவில் 10 ஆண்டுகளாக இருட்டறையில் அடைந்து கிடந்த வயதான சகோதரிகளை தன்னார்வ தொண்டு அமைப்பினர் தற்போது மீட்டுள்ளனர்.
உடுப்பி அருகே கடபாடி பித்ரோடியா காலனியில் பாழடைந்த நிலையில் உள்ள பழைய ஓட்டு வீடு ஒன்றில் வெளியுலக தொடர்பே இல்லாமல் நர்சி (57), முத்து (55) என்ற 2 சகோதரிகள் அடைந்து கிடந்துள்ளனர்.
தனியார் தொண்டு அமைப்பு ஒன்றுக்கு கிடைத்த இந்த தகவலை அடுத்து, அவர்களை மீட்க சென்றுள்ளனர்.
மின்சார வசதியோ அல்லது இதர விளக்கு வசதியோ இல்லாத அந்த வீட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பினர் உள்ளே சென்றுள்ளனர்.
அந்த வீட்டுக்குள் பல இடங்களில் பெரிய பெரிய புற்றுகளும், மேலும் குப்பைக்கழிவுகளும் அதற்கு மத்தியில் எலிகளும் இருந்துள்ளன.
அந்த வீட்டின் ஒரு அறையில் மூலையில் பெண் ஒருவர் அமர்ந்து இருந்ததோடு, இன்னொருவர் குப்பைகள் மத்தியில் படுத்திருந்துள்ளார்.
அவர்களை மீட்ட தன்னார்வ தொண்டு அமைப்பினர் அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், அந்த 2 பெண்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை.
அவர்களின் இந்த நிலைக்கு உணவு இன்மையும், பொருளாதார வசதியின்மையுமே காரணம் என்றும் மற்றபடி அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சகோதரிகள் குறித்து மாநில மகளிர் ஆணையத்துக்கு மாவட்ட மகளிர் நல மேம்பாட்டு துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum