Top posting users this month
No user |
Similar topics
குழந்தை இறந்த துக்கம்: பிரசவம் பார்த்த நர்ஸ் முகத்தில் ஆசிட் வீசிய தந்தை
Page 1 of 1

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை இறப்புக்கு பழி தீர்ப்பதற்காக செவிலியர் முகத்தில் ஆசிட் வீசிய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார் என்பவரின் மனைவி விஜயகுமாரி ( 46), இலுப்புலி துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை மாலை பணிமுடிந்து, மாணிக்கம்பாளையத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடியிருப்புக்கு நாராயணன் என்பவரின் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விஜயகுமாரி மீது திராவகம் வீசி விட்டுத் தப்பிவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த விஜயகுமாரி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக வேலகவுண்டம்பட்டி பொலிஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே, சந்தேகத்தின்பேரில் எலச்சிபாளையம் அருகே உள்ள கொண்ணையார் கிராமத்தைத் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பிரபு என்ற மணிகண்டன் (25), நண்பர் விக்கி என்ற விஜயகுமார் (20) இருவரையும் தனிப்படை பொலிசார் புதன்கிழமை இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் செவிலியர் விஜயகுமாரி எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார். அக்டோபர் மாதம் மணிகண்டன், தன் மனைவி மீனாவை பிரசவத்துக்காக எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார்.
அங்கு மீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தை சற்று நேரத்தில் இறந்து விட்டது. அப்போது பணியில் இருந்த விஜயகுமாரி, சரியாகக் கவனிக்காததால்தான் குழந்தை இறந்துவிட்டதாகக் கருதிய மணிகண்டன், விஜயகுமாரியிடம் சண்டைபோட்டு பிரச்சனை செய்துள்ளார்.
இதன்பிறகு விஜயகுமாரியைப் பழிவாங்க எண்ணிய மணிகண்டன், தன் நண்பர் விஜயகுமாரோடு சேர்ந்து, மாணிக்கம்பாளையத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து சென்ற விஜயகுமாரி மீது திராவகம் வீசியது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைதொடர்ந்து, மணிகண்டன் மற்றும் விஜயகுமார் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 42 ஆண்டுகளாக கோமா: கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட நர்ஸ் அருணா காலமானார்
» பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் மீது ஆசிட் வீச்சு: வரதட்சனை கொடுமை
» துக்கம் விலக துர்க்கை மந்திரம்
» பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் மீது ஆசிட் வீச்சு: வரதட்சனை கொடுமை
» துக்கம் விலக துர்க்கை மந்திரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum