Top posting users this month
No user |
Similar topics
கத்திரிக்காய் கடைச்சல்
Page 1 of 1
கத்திரிக்காய் கடைச்சல்
கத்திரிக்காய் - அரைக்கிலோ
வெங்காயம் - இரண்டு
பூண்டு - நான்கு பற்கள்
பச்சைமிளகாய் - ஆறு
பச்சை தக்காளி - நான்கு
புளி - நெல்லிகாய் அளவு
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
கடலெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கத்திரிக்காயின் காம்பை நீக்கி விட்டு நான்காக நறுக்கி கொள்ளவும்.
பிறகு தாளிப்பு பொருட்களைத் தவிர்த்து, மற்ற பொருட்களை காயுடன் சேர்த்து ஒரு கோப்பை நீரை ஊற்றி மிதமான அனலில் வேகவைத்துக் கொள்ளவும்.
காயுடன் எல்லாப் பொருட்களும் நன்கு வெந்தவுடன் இறக்கி அதிகப்படியான நீரை வடித்து விட்டு நன்கு கடைந்துக் கொள்ளவும். மையாக கடையக் கூடாது.
வேண்டிய அளவு கெட்டி பதமாக கடைந்து கொண்டு ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை காய வைத்து தாளிப்பு பொருட்களைப் பொட்டு கருக வறுத்து கலவையின் மீது கொட்டவும். மாவு பண்டங்களுக்கு ஏற்ற பக்க உணவாக இந்த கத்திரிக்காய் கடைச்சலை பரிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum