Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தீர்ப்பை திருத்த அணுகிய நீதிபதி குமாரசாமி..சந்திக்க மறுத்த கர்நாடக தலைமை நீதிபதி: பரபரப்பு தகவல்

Go down

தீர்ப்பை திருத்த அணுகிய நீதிபதி குமாரசாமி..சந்திக்க மறுத்த கர்நாடக தலைமை நீதிபதி: பரபரப்பு தகவல் Empty தீர்ப்பை திருத்த அணுகிய நீதிபதி குமாரசாமி..சந்திக்க மறுத்த கர்நாடக தலைமை நீதிபதி: பரபரப்பு தகவல்

Post by oviya Fri May 15, 2015 3:07 pm

கர்நாடக தலைமை நீதிபதி , சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்த தீர்ப்பை திருத்த அணுகிய நீதிபதி குமாரசாமியை சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கடந்த 11ம் திகதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, தீர்ப்பில் பிழை இருந்தது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நீதிபதி குமாரசாமி, தனது உதவியாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்திய பின்னர், உயர் நீதிமன்ற பதிவாளரை குமாரசாமி சந்தித்ததாக கூறப்பட்டது.

அப்போது சில திருத்தங்களை நீதிபதி குமாரசாமி கூறியதாகவும், அதற்கு பதிவாளர் சில விளக்கங்களை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை திருத்தக் கூடாது என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பட்டீலிடம் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவை ஏற்க மறுத்த கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர், தீர்ப்பை மாற்ற நீதிபதி குமாரசாமி 3 முறை தலைமை நீதிபதியை சந்திக்க முயன்றும், அவரை சந்திக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார்.

பின்னர் தலைமை நீதிபதியுடன் நடந்த உயர்மட்ட ஆலோசனையில், இந்த தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய கூடாது என்றும், உச்ச நீதிமன்றத்துக்கு தீர்ப்பு நகல் அனுப்பி வைக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பணி முடிந்துவிட்டது.

இனிமேல், இந்த வழக்கின் தீர்ப்பு பற்றி உச்ச நீதிமன்றமே தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார்.

கர்நாடக தலைமை நீதிபதி தீர்ப்பை திருத்த முயன்ற நீதிபதி குமாரசாமியை சந்திக்க மறுத்துள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum