Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதா விடுதலை: ஆர்ப்பரிக்கும் அதிமுக தொண்டர்கள்.. வெறிச்சோடிய திமுக
Page 1 of 1

ஜெயலலிதா விடுதலை என்று தீர்ப்பு வெளியானதும் திமுக தலைமையகத்தில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் கலையத் தொடங்கிய நிலையில், அதிமுக தலைமையகத்தில் அதிமுக தொண்டர்கள் பெருமளவில் குவிய தொடங்கியுள்ளனர்.
காலை 7 மணி முதலே, சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்துலும் அதிமுக தலைமையகத்திலும் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இந்த முறையும் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்ற நினைத்த திமுகவினர் உற்சாகமாக காணப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டின் முன்பும் ஏராளமான தொண்டர்கள் உற்சாகத்துடன் திரண்டிருந்தனர்.
ஆனால், சரியாக காலை 11 மணிக்கு ஜெயலலிதா விடுதலை என்று தீர்ப்பு வெளியானதை அடுத்து, அறிவாலயத்தில் இருந்து திமுக தொண்டர்கள் கலைந்து சென்றதால் சில நிமிடங்களில் அண்ணா அறிவாலயம் வெறிச்சோடியுள்ளது.
அதே நேரத்தில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெளியிலும், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டின் முன்பும் காலை முதலே தொண்டர்கள் குவிந்தாலும், தீர்ப்பு வெளியாகும் வரை தொண்டர்கள் அமைதியாகவே இருந்துள்ளனர்.
மேலும், 11.01 மணிக்கு அனைத்து ஊடகங்களிலும் தீர்ப்பு விவரம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், அம்மா வாழ்க என்ற கோஷங்களை எழுப்பியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வைகோ வாழ்த்து:
சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுப்ரமணியசாமி அதிர்ச்சி:
கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு வழக்கறிஞர் மேல்முறையீடு செய்தால் அவருக்குத் தான் உதவுவதாகவும் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள்: அதிமுக தொடர்ந்து முன்னிலை, தொண்டர்கள் கொண்டாட்டம்
» ஜெயலலிதா வழக்கில் முட்டுக்கட்டை போடும் திமுக
» மே 22-ல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: ஜெயலலிதா 23ம் திகதி முதல்வராக பதவியேற்பு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum