Top posting users this month
No user |
Similar topics
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள்: அதிமுக தொடர்ந்து முன்னிலை, தொண்டர்கள் கொண்டாட்டம்
Page 1 of 1

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி திருச்சி-மதுரை சாலையில் உள்ள பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முழுமையான முடிவுகள் இன்று மதியம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் சுற்று தேர்தல் முடிவுகளின் படி,
அ.தி.மு.க. - 6234 , தி.மு.க. - 1950, பா.ஜ.க. - 170, சி.பி.எம். - 27, டிராஃபிக் ராமசாமி - 30, நோட்டா - 64
இரண்டாம் சுற்று முடிவுகளின் படி:
அ.தி.மு.க. - 12,233, தி.மு.க. - 4,140, பா.ஜ.க. - 351, சி.பி.எம். - 83, டிராஃபிக் ராமசாமி - 66, நோட்டா - 131
மூன்றாம் சுற்று முடிவுகளின் படி:
அ.தி.மு.க. - 19,137, தி.மு.க. - 6,740, பா.ஜ.க. - 513, சி.பி.எம். - 181, டிராஃபிக் ராமசாமி - 95, நோட்டா - 194
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வளர்மதி, பா.ஜ.க சார்பில் பொறியாளர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை மற்றும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, சுயேச்சைகள் என மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர்.
இதில், மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 70 ஆயிரத்து 281 பேரில், 2 லட்சத்து 21 ஆயிரத்து 172 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்து இருந்தனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 26 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 138 பேரும், திருநங்கைகள் 8 பேரும் ஆவார்கள். இந்த தேர்தலில் 81.83 சதவிகித வாக்குகள் பதிவாகியது.
இந்த தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் இந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதற்காக, வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளது. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.
அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வெற்றிக் கொண்டாட்டத்தை இப்போதே தொடங்கிய அவர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பணி: ஒட்டுமொத்த கேபினெட்டையும் களமிறக்கும் ஜெயலலிதா
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அமோக வெற்றி பெற்ற ஜெயலலிதா...பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுக

Permissions in this forum:
You cannot reply to topics in this forum