Top posting users this month
No user |
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
Page 1 of 1

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விருவிருப்பாக நடந்துவருகிறது.
ஸ்ரீரங்கம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 322 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இந்த வாக்குப்பதிவை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில், அதிமுக சார்பில் எஸ்.வளர்மதி, திமுக சார்பில் என்.ஆனந்த், பாஜக சார்பில் எம்.சுப்ரமணியம், உட்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.
ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மினி லாரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்குத் தேவையான 89 பொருட்கள் பொலிஸார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு நாளில் மத்திய ஆயுதப்படையின் 10 கம்பெனிகள் உட்பட 2,657 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 322 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படும்.
தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்தபடியே வாக்குப்பதிவைக் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தொகுதியில் 1,33,020 ஆண்கள், 1,37,096 பெண்கள், 13 இதரர் என மொத்தம் 2,70,129 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.
தொகுதியில் உள்ள 322 வாக்குச்சாவடிகளில் 79 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் பொலிஸாரின் தீவிர ரோந்தும், துணை ராணுவப் படையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum