Top posting users this month
No user |
Similar topics
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கி ஜெயலலிதாவின் கோட்டையை பிடிப்பாரா குஷ்பு?
Page 1 of 1

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸில் இணைந்த குஷ்புவை வேட்பாளாராக நிறுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு வேட்பாளரை திமுக அறிவித்துவிட்டது.
இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பாக காங்கிரஸ் கட்சி தனித்து களமிறங்கும் என்று கூறிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், நடிகை குஷ்புவை களம்இறக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கட்சித் தலைவர் இளங்கோவனிடம் கூறிவருகின்றனர். குஷ்பு தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில், கட்சி குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவுக்கு ஓட்டுகளை பெறும் என நம்புகின்றனர்.
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று இளங்கோவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில், அகில இந்திய காங்கிரஸ் செயலர் திருநாவுக்கரசர், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கோபிநாத், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் யசோதா, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொன்ன ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இடைத்தேர்தலில், போட்டியிடலாமா என்பது குறித்து, ஆலோசனை நடத்தியிருக்கிறோம்.
தனித்து போட்டியிடுமா? கூட்டணியா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இளங்கோவன், தனித்து போட்டியிடுவதா?வேறு கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா? அல்லது போட்டியிடாமல் விடுவதா? பொது வேட்பாளருக்கான முயற்சி எடுப்பதா? என, பல விடயங்கள் குறித்தும் பேசியிருக்கிறோம்.
பா.சிதம்பரம், தங்கபாலு ஆகியோரிடமும் கருத்து கேட்டுள்ளோம். அதை, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு தெரியப்படுத்துவோம். மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள்: அதிமுக தொடர்ந்து முன்னிலை, தொண்டர்கள் கொண்டாட்டம்
» சூடுபிடிக்கும் ஸ்ரீரங்கம் களம்: மோதுவார்களா குஷ்பு, நெப்போலியன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum