Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதா விடுதலைக்காக நடத்தப்படும் பூஜைகளில் கலந்து கொள்வதா? கருணாநிதி எச்சரிக்கை
Page 1 of 1

திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதாவின் விடுதலைக்காக நடத்தப்படும் பூஜை, யாகங்களில் கலந்து கொண்ட அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.
கருணாநிதி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில், ஒவ்வொரு துறையிலும், ஊழல் மண்டிக் கிடக்கிறது. இப்போது தான் வெளிப்படையான சான்றுகளுடன், வெளி வருகிறது.
ஆட்சி இன்னும் ஓராண்டு தான். அதற்குள் முடிந்த வரை சுரண்டியது லாபம் என்ற அளவில் பணியாற்றுகின்றனர்.
அமைச்சர்கள் இப்போது ஆற்றும் பணிகள், ஒவ்வொரு கோவிலாகச் சென்று யாகம் என்றும், தேர் இழுப்பது என்றும், தீ மிதிப்பது என்றும் வேண்டுதலில் ஈடுபடுவது தான்.
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, ஜெயலலிதா வின் விடுதலைக்காக, அவற்றையெல்லாம் செய்வதாகக் கூறிக் கொண்டாலும், உண்மையில் விசாரித்தால், ஒவ்வொருவரும் தங்களின் அமைச்சர் பதவி போய்விடக் கூடாது; தாங்கள் எதிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்கு தான், அந்த கோவில் திருப்பணிகள்.
ஜெயலலிதாவின் விடுதலைக்காக, அந்தப் பணிகளை செய்வதாகக் கூறிக் கொண்டு நடத்தப்படும் பூஜைகளில், எத்தனை ஆட்சியர்கள் கலந்து கொள்கின்றனர்.
அவர்கள் எல்லாம் யார்? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளா? அல்லது ஆளுங்கட்சியின் எடுபிடிகளா?
அவர்கள் மீதெல்லாம் தலைமைச் செயலர், ஆளுநர் இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்றைக்கு வேண்டுமானால், அதிகாரிகள் தப்பித்து கொள்ளலாம். ஆனால், வருங்காலத்தில் இவர்கள் எல்லாம் விசாரணை கமிஷன் முன் நின்று, பதில் சொல்ல வேண்டிய நிலைமை நிச்சயம் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கருணாநிதி இல்ல திருமணத்தில் யாரோ ஒருவராக கலந்து கொண்ட அழகிரி
» தூக்கிவீசப்பட்ட ஜெயலலிதா, கருணாநிதி: நகராட்சி கூட்ட ரகளை
» ஜெயலலிதா தீர்ப்பு நிரந்தரமா..?? கருணாநிதி மத்தியரசு அடுத்த நகர்வில்..??

Permissions in this forum:
You cannot reply to topics in this forum