Top posting users this month
No user |
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது மகிழ்ச்சியான செய்தி: கருணாநிதி
Page 1 of 1

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வது மகிழ்ச்சியான செய்தி என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில்கள்,
கேள்வி:- ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருக்கிறதே; அதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
பதில்:-ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யப் போவதாக வந்துள்ள செய்தி மகிழத்தக்க செய்தியாகும்.
நீதியை நிலைநாட்ட யார் முன்வந்தாலும் அவர்களை வரவேற்கத் தயாராக இருப்பவன் நான் என்பதால், கர்நாடக அரசின் முடிவை வரவேற்கிறேன்.
கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை பெரும்பாலான எதிர்க்கட்சிகள், உங்களைப் போலவே புறக்கணித்திருக்கிறார்களே?
பதில்:- தமிழ்நாட்டில் தற்போது தேர்தல்கள் எப்படி நடைபெறுகிறது என்பதை ஏற்கனவே நேரில் உணர்ந்த கட்சிகள், இனியும் தாங்கள் இந்த ஜனநாயக முரண்பாடுகளுக்குப் பலியாகத் தயாராக இல்லை என்பதால்தான், இந்த இடைத்தேர்தலை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இது வரவேற்கத்தக்க செய்தியாகும்.
கேள்வி:- ஐ.ஐ.டி. மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு நல்கியபோதும், அரசுத் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஒரு அறிக்கைக்கூட வெளியிடவில்லையே?
பதில்:- மாநில அரசு இது பற்றி வாய் திறந்தால்தான் ஆச்சரியம்.
கேள்வி:- தாழ்த்தப்பட்ட மாணவ சமுதாயத்தின்மீது நடக்கிற தாக்குதல்கள் என்று இதனை எடுத்துக்கொள்ளலாமா?
பதில்:- ஐ.ஐ.டி. மாணவப்பிரச்சனை குறித்து கழகத்தின் சார்பில் நானும், பொருளாளர் ஸ்டாலினும் விளக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளோம். அதில் எல்லா விவரங்களும் இடம் பெற்றுள்ளன. கழகத்தின் சார்பில் இதற்காக அங்கே ஆர்ப்பாட்டமும் நேற்று நடைபெற்றுள்ளது.
கேள்வி:- ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட டிராபிக் ராமசாமி உங்களிடம் ஆதரவு கேட்டிருந்தாரே, உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்:- டிராபிக் ராமசாமி பல கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். அதுபோலத்தான் எங்களையும் கேட்டிருக்கிறார். நாங்கள் அதைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறோம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum