Top posting users this month
No user |
Similar topics
பாலியல் வழக்கில் கைதான மருத்துவர் பிரகாஷ்: தண்டனை காலம் முடியும் முன்னே விடுதலை
Page 1 of 1

பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மருத்துவர் பிரகாஷை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மூட்டு அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரகாஷ் (54).
2001-ல் இவரது மருத்துவமனையில் வேலை பார்த்த புதுச்சேரியைச் சேர்ந்த கணேசன் (24) என்பவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாசக் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியது.
இதையடுத்து, அவர் வடபழனி பொலிஸில் அளித்த புகாரில், பிரகாஷ் தன்னை மிரட்டி பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கச் செய்து வீடியோக்கள் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதாக கூறினார்.
பின்னர் நடந்த விசாரணையில், பிரகாஷ், அவருக்கு உடந்தையாக இருந்த சரவணன் (25), விஜயன் (24) நிக்சன் (24) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த சித்ரா, வீடியோக்களை எடுத்தது தெரிய வந்தாலும், அவர் அப்ரூவராக மாறியதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை விரைவு நீதிமன்றம், 2008-ல் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
மேலும் 3 பேரில் நிக்சனை விடுதலை செய்தும், மற்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிமன்றம் விதித்தது.
2009-ல் தன்னை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் பிரகாஷ் மேல்முறையீடு செய்தார்.
அப்போது, பிரகாஷ் தரப்பு வழக்கறிஞர், பிரகாஷ் சிறந்த மருத்துவ நிபுணர், அறிவுத்திறன் மிக்கவர்.
அவர் தனது தவறை உணர்ந்து திருந்திவிட்டார். சிறையில் இருந்த காலத்தில் ஆன்மிகம் மற்றும் அறிவியல் தொடர்பாக 100-க்கும் அதிகமான புத்தகங்கள் எழுதியுள்ளார்.
கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து சிறைத் தண்டனையை அனு பவித்து வருகிறார்.
எனவே, நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிரகாஷ் இதுவரை அனுபவித்த தண்டனையை முழு தண்டனைக் காலமாக கருதி, நன்னடத்தை காரணமாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தண்டனை காலம் முடிந்தும் பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியர்கள்
» முதியவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளிப் பெண்: தண்டனை அதிகரிப்பு
» சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் நெருக்கடி தரப்பட்டது உண்மையே: மருத்துவர் கடிதத்தால் பரபரப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum