Top posting users this month
No user |
நடிகர் சிரஞ்சீவியால் கடும் அதிருப்தியடைந்த ரசிகர்கள்: தீவிர ஆலோசணை
Page 1 of 1

நடிகர் சிரஞ்சீவி அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருப்பதால் அதிருப்தியடைந்த அவரது ரசிகர்கள், அவரது கட்சியில் நீடிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி ஐதராபாத்தில் இன்று முடிவெடுக்கவுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், டெல்லி மேல்சபை எம்.பி.யுமான நடிகர் சீரஞ்சீவி ஆந்திர மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக இருந்தபோது, தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு சிரஞ்சீவி அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும், தனது 150–வது படத்தில் நடிப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் தற்போது சிரஞ்சீவியின் செயல்பாடு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது ரசிகர்கள், அவரை நம்பி அரசியலில் தொடரலாமா? அல்லது அவரது சகோதரர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேரலாமா? என்று குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது.
மேலும், ஐதராபாத்தில் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்க சிரஞ்சீவி ரசிகர்கள் கூட்டம் இன்று நடப்பதாகவும், அதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் பங்கேற்று அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum